உள்ளடக்கத்துக்குச் செல்

அச்சம்

விக்கிமேற்கோள் இலிருந்து

அச்சம் என்பது ஒரு உணர்ச்சி வெளிப்பாடாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  • அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மால் அன்பு செலுத்த முடியாது. -அரிஸ்டாட்டில்[2]
  • உண்மையைக் கடைப்பிடிப்பவர்களுக்கு கவலை இல்லை; அறிவுடையவனுக்குத் தயக்கம் இல்லை; உள்ளத் துணிவுடையவனுக்கு நெஞ்சில் அச்சம் இருக்கயிடமில்லை.[3]
  • மனச்சான்று குற்றத்திற்காகச் செலுத்தும் அபராதமே அச்சம். - புளுடார்க்[4]
  • தீமையிலிருந்து நம்மைக் காக்கவே நம்முன் அச்சம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அது அறிவுக்கு உதவியாயிருக்க வேண்டுமேயன்றி, அதை அடக்கிவிடக் கூடாது. கற்பனையான பயங்கரங்களைத் தோற்றுவிக்கவோ, வாழ்க்கைப் பாதையில் எண்ணற்ற கஷ்டங்களை உண்டாக் கவோ அதை அனுமதிக்கக்கூடாது. - ஜான்ஸன்[4]
  • நாம் வெறுக்கின்ற விஷயங்களைக் கண்டு அஞ்சுவதாகப் பாவனை செய்கிறோம். உண்மையில் நாம் அஞ்சுபவைகளை வெறுப்பதற்காகவும் பாவனை செய்கிறோம். - கோல்டன்[2]
  • நன்றியைக்காட்டிலும் கடமையைச் செய்ய அச்சமே தூண்டுகின்றது. ஒழுக்கத்தை விரும்பியோ, எல்லாப் பொருள்களையும் அளித்துள்ள ஈசனுக்கு நன்றி செலுத்தவோ நேர்மையாக நடப்பவன் ஒருவன் என்றால், தண்டனைக்கு அஞ்சி நேர்மையாக நடப்பவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். -கோல்டுஸ்மித்[2]
  • நாம் அடிக்கடி அஞ்சுவதையே சில சமயங்களில் வெறுக்கிறோம். - ஷேக்ஸ்பியர்[2]
  • குற்றத்தையும். இருள் நிறைந்த செயல்களையும் தொடர்ந்து அச்சம் வரும்: நேர்மையான உள்ளத்திற்கு அச்ச்மே தெரியாது. - ஹாவர்டு[2]
  • அச்சமே. வருவதை அறிவுறுத்தும் தாய். - டெய்லர்[2]
  • உண்மை வீரத்திற்கு மரணத்தினால் வரும் வேதனையைவிட கோழைத்தனத்திற்கு அச்சத்தால் அதிக வேதனை ஏற்படுகின்றது. -சர். பி. ஸிட்னி[2]
  • ஆதாரமில்லாமல் தோன்றும் பயங்கரங்களையெல்லாம் விரட்டிவிட்டால், மனித சமூகம் அதிக இன்பமடையும். - ஜான்ஸன்[2]
  • நல்ல மனிதர்களுக்கு அச்சங்கள் குறைவு. - போவி[2]
  • தன்னை எதிரி வென்றுவிடுவானோ என்று அஞ்சுபவன் நிச்சயமாய்த் தோல்வியுறுவான். - நெப்போலியன்[2]
  • கவலையோ, பயமோ இல்லாமல் வாழ்க்கையை நடத்துவதில் மிகுந்த அழகு இருக்கின்றது. நம்முடைய அச்சங்களில் பாதி ஆதாரமற்றவை மறுபாதி நம்பத்தகாதவை. - போவீ[2]
  • ஒழுக்கத்தில், எது அச்சத்தில் தொடங்குகின்றதோ, அது அயோக்கியதையில் முடிகின்றது: மதத்தில், அச்சத்தில் தொடங்குவது வழக்கமாக வெறியிலே போய் முடிகின்றது. அச்சத்தை ஒரு தத்துவமாகவோ, தூண்டுதலாகவோ கொண்டால், அதுவே எல்லாத் தீமைகளுக்கும் ஆரம்பமாகும். - திருமதி. ஜேம்ஸன்[2]
  • ஒருவன் கொண்டுள்ள நன்னம்பிக்கை காரணமாக ஏற்படும் அச்சம் நேர்மையானது; ஐயத்தினாலும் அவநம்பிக்கையினாலும் ஏற்படும் அச்சம் தீமையானது. முதலாவது அச்சம் கடவுளை நம்பி நன்மையைப் பெறலாம் என்ற நம்பிக்கையளிப்பது. பிந்திய அச்சம் கடவுளிடம் நம்பிக்கையில்லாத ஏக்கத்தை உண்டாக்குவது முதல் கூட்டத்தார் இறைவனை, இழந்துவிடக்கூடாதே என்று அஞ்சுகின்றனர். இரண்டாவது கூட்டத்தார் இறைவனைக் கண்டுகொள்ளக்கூடாதே என்று அஞ்சுகின்றனர். - பாஸ்கல்[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 'அடையாள அட்டை' என்னும் கவிதையிலிருந்து
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 2.15 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 11-12. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  3. என். வி. கலைமணி (2000). கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள். நூல் 7-25. சாந்தி நிலையம். Retrieved on 7 ஏப்ரல் 2020.
  4. 4.0 4.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 10. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=அச்சம்&oldid=18951" இலிருந்து மீள்விக்கப்பட்டது