ஆணவம்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

ஆணவம்,செருக்கு, இறுமாப்பு, அகந்தை என்பதானது "நான்", "எனது (என்னுடையது)" என்னும் நினைப்பு. எடுத்துக்காட்டாக, நான்தான் இந்நாட்டிலேயே மிகுந்த செல்வம் உடையவன்; அல்லது படித்தவன்; என்பது போலாகும்.

மேற்கோள்கள்[தொகு]

 • அகம்பாவம் வந்தால் அழிவு வரும். ஆணவம் வந்தால் அடிசறுக்கும். -நீதிமொழிகள் 16:18
 • ஆணவமான இதயம் இருந்தால் அழிவு வரும். மனத்தாழ்மை இருந்தால் மகிமை வரும். -நீதிமொழிகள் 18:12
 • கண்களுக்கு அருகிலுள்ள சிறு தூசி உலக முழுவதையும் மறைத்துவிட்டுத் தன்னை மட்டுமே காண இடங்கொடுக்கும். நான்' என்பதைப்போல எனக்குத் தொந்தரவு கொடுக்கும் தூசி வேறு அறியேன். -ஜார்ஜ் எலியட்[1]
 • கர்வமானது பிறருக்குத் தீங்கிழைக்கத் தூண்டாமல் நமக்கு நேர்ந்த தீங்கை மறைப்பதற்கு மட்டுமே நம்மைத் துண்டுமானால் தீயதன்று. -ஜார்ஜ் எலியட்[1]
 • குறைகளில் எல்லாம் பெரிய குறை யாது? குறையிருந்தும் குறையிருப்பதாக உணராததே. -கார்லைல்[1]
 • கர்வங்கொண்டவர்கள் சம்பந்தமான கஷ்டமெல்லாம் அவர்கள் தாங்கள் வீண் பெருமை பாராட்டுகிறவர்கள் என்பதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்பதே. -செஸ்ட்டர்ட்[1]
 • பிறர் கர்வத்தை மாற்ற நாம் உபயோகிக்கக் கூடிய மருந்து அன்பு ஒன்றே. -கதே[1]
 • கர்வமானது குதிரையின் மேல் கம்பீரமாகச் சவாரி செய்துகொண்டு போகும். ஆனால் கால் நடையாகத்தான் திரும்பி வரும். வழி நெடுகப் பிச்சை எடுக்கவும் செய்யும். -லாங்பெல்லோ[1]
 • கர்வம்-அதுதான் முட்டாள்களை விட்டு ஒரு பொழுதும் நீங்காத துர்க்குணம். -போப்[1]
 • சாத்தான் இளித்தான்- அவனுடைய மனதிற்குகந்த பாபம் தாழ்மைபோல் நடிக்கும் கர்வமே. -கோல்ரிட்ஜ்[1]
 • உலகத்தில் எத்தனையோ விதமான கர்வங்கள் உள. ஆனால் அவற்றில் பெரியது ஞானி என்று ஒருவன் தன்னைத்தானே பிதற்றும் கர்வமே. -ஹூட்[1]
 • நம்மைப்பற்றி நாம் கொள்ளும் அபிப்பிராயத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால், பொது ஜனங்கள் நம்மைப் பற்றிக் கொள்ளும் அபிப்பிராயம் அவ்வளவு பெரிய கொடுங்கோன்மை அன்று. -தோரோ[1]
 • பணத்திமிர் கொண்ட செல்வர்களின் இறுமாப்பில் ஏழை மனிதன் ஒருவனுக்கு ஏற்படுகிற வெறுப்பைப் போல் வேறு எதிலும் இராது. ஆனால் அந்த ஏழை தான் செல்வனானால், அவன் எந்தத் தீமையை வெறுத்தானோ. அதிலேயே அவனும் விரைவில் பாய்ந்துவிடுகிறான். மனித இயல்பிலேயே விசித்திரமான முரண்பாடுகள் அமைந்திருக்கின்றன. .-கம்பர்லண்ட்[2]
 • மனிதர்கள். தங்கள் கருத்துகளையே உறுதி செய்துகொண்டு இறுமாப்படைந்திருக்கையில், அவர்களுடைய கருத்துகளுள் பெரும்பாலானவை தவறாயிருக்கும். அவைகளைப்பற்றி நிதானமாக ஆராயாமல் உணர்ச்சி வசப்பட்டு அபிப்பிராயங்கள் கூறுவார்கள் ஆராய்ச்சிதான் பரிகசிக்கத்தக்க தவறுகளிலிருந்து அவர்களைக் காக்க முடியும். -ஹியூம்[2]

குறிப்புகள்[தொகு]

Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


 1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 1.9 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கர்வம். நூல் 112- 113. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
 2. 2.0 2.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 109-110. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஆணவம்&oldid=20159" இருந்து மீள்விக்கப்பட்டது