வரலாறு
Appearance
(சரித்திரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வரலாறு (History) என்பது இறந்த காலத்தைப் பற்றி படிக்கின்ற ஒரு பாடப்பிரிவு என எழுதப்பட்ட ஆவணங்களில் விவரிக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- சகலரும் ஏற்றுக்கொள்ளும் கட்டுக்கதை தானே சரித்திரம் என்பது? -நெப்போலியன்[1]
- சரித்திரம் என்பது முன்மாதிரி மூலம் கற்பிக்கும் தத்துவ சாஸ்திரமே யன்றி வேறன்று, -போலிங்புரோக்[1]
- சரித்திரம் என்பது மனித ஜாதியின் குற்றங்கள் குறைகள் அதிர்ஷ்டங்கள் அறிவீனங்கள் ஆகியவற்றைப் பதிவு செய்யும் நூலேயன்றி வேறன்று. -கிப்பன்[1]
- சரித்திரம் பெரிய அளவுள்ள வாழ்க்கை வரலாற்றைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. - லாமார்டைன்[2]
- சரித்திரத்தை உண்டாக்கும் மனிதர்களுக்கு அதை எழுத நேரம் கிடைப்பதில்லை. - மெட்டர்னிக்[2]
- சரித்திரம் வெறும் குற்றங்கள். தவறுகள். துரதிருஷ்டங்கள் ஆகியவற்றின் பட்டியல் மட்டும் அன்று. -கிப்பன்[2]
- நாம் சரித்திரத்தை நமது விருப்பு வெறுப்புகளின் மூலம் பார்க்கிறோம். -வென்டல் ஃபிலிப்ஸ்[2]
- எல்லா சரித்திரமும் ஒரே பொய். -ஸர். ஆர். வால்பொல்[2]
- வாழ்க்கையின் சுருக்கத்திற்குச் சரித்திரம் சிறிது ஈடு செய்வதாகும். - ஸ்கெல்டர்[2]