வரலாறு

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
நிக்கோலசு கைசிசுவின் வரலாறு குறித்த வரைபடம்

வரலாறு (History) என்பது இறந்த காலத்தைப் பற்றி படிக்கின்ற ஒரு பாடப்பிரிவு என எழுதப்பட்ட ஆவணங்களில் விவரிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  • முன்னாளில் நடந்தவற்றை அறியாவிடில் நாம் என்னாளும் குழந்தைகளே. -ஸிஸரோ[1]
  • எதைப்பற்றி எழுதினாலும் பெரிய எழுத்தாளர் எல்லாரும் சரித்திர ஆசிரியர்களே. -லாண்டார்[1]
  • சகலரும் ஏற்றுக்கொள்ளும் கட்டுக்கதை தானே சரித்திரம் என்பது? -நெப்போலியன்[1]
  • சரித்திரம் என்பது முன்மாதிரி மூலம் கற்பிக்கும் தத்துவ சாஸ்திரமே யன்றி வேறன்று, -போலிங்புரோக்[1]
  • சரித்திரம் என்பது மனித ஜாதியின் குற்றங்கள் குறைகள் அதிர்ஷ்டங்கள் அறிவீனங்கள் ஆகியவற்றைப் பதிவு செய்யும் நூலேயன்றி வேறன்று. -கிப்பன்[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/சரித்திரம். நூல் 179. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=வரலாறு&oldid=17312" இருந்து மீள்விக்கப்பட்டது