உள்ளடக்கத்துக்குச் செல்

ஜார்ஜ் எலியட்

விக்கிமேற்கோள் இலிருந்து
(ஜியார்ஜ் எலியட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஜார்ஜ் எலியட் (George Eliot) (22 நவம்பர் 1819 – 22 திசம்பர் 1880; இவர் மேரி ஆன் அல்லது மரியன்a என்றும் அழைக்கப்பட்டார்), ஜார்ஜ் எலியட் என்ற புனைபெயரில் அறியப்பட்ட இவர் ஆங்கில புதின எழுத்தாளர், கவிஞர், பத்திரிக்கையாளர், மொழிபெயர்பாளர் என விக்டோரியா காலத்திய முன்னனி எழுதாதாளராவார்.

இவரது மேற்கோள்கள்

[தொகு]
  • வாஞ்சையும் தாழ்மையும் துன்பங்களைச் சகித்துக் கொள்வதன் மூலமே கற்றுக்கொள்ள முடியும். [1]
  • அதிர்ஷ்டதேவி சபலபுத்தியுடையவள் என்று கூறுவர். ஆனால் சிலசமயங்களில் அவள் பாத்திரம் அறிந்து வழங்கும் சற்குணமுடையவளாயிருப்பது முண்டு.[2]
  • அறம் இதுவென்று அறியாமலும், விரும்பியதைச் செய்ய முடியாமலும் இருந்தாலும், அறத்தில் ஆசை கொள்வதால் தீமையை எதிர்க்கும் தெய்வீக சக்தியில் நாமும் ஓர் அம்சமாவோம்.[3]
  • நமது உணர்ச்சியின் தன்மை, விசாலம் ஆகிய இரண்டின் அளவே நமது ஒழுக்கமாகும்.[3]
  • நான் எனக்காக மட்டுமே உள்ள ஆசைகளை வைத்துக்கொள்ளாதிருக்க முயலுகின்றேன். ஏனெனில், அவை பிறருக்கு பயவா திருக்கலாம். தவிர இப்போழுதே அவை என்னிடம் அதிகமாக இருக்கின்றன.[3]
  • நமது நன்மையை அடையத் தவறிவிட்டாலும் பிறர் நன்மை இருக்கவே செய்கின்றது. அதற்காக முயலுதல் தக்கதே.[3]
  • ஒரு விஷயத்தைப் பல வாயிலாகப் பார்க்க முடியாத புத்தி குறுகியதாகும்.[4]
  • நாம் அற்பமானவை என்று ஒதுக்கித்தள்ளும் செயல்களிலேதான் இன்பத்தின் விதைகள் அமைந்திருப்பதால் அவை வீணாகின்றன.[5]
  • அடக்கமும், அன்பும் துன்பங்களால் கற்றுக் கொள்ள வேண்டிய தத்துவ உணர்வுகள்.[6]
  • ஒருவருக்கொருவர் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டத்தைக் குறைத்துக்கொள்ள உதவி செய்யாவிட்டால், நாம் எதற்காக வாழ்கிறோம்?[7]
  • கண்களுக்கு அருகிலுள்ள சிறு தூசி உலக முழுவதையும் மறைத்துவிட்டுத் தன்னை மட்டுமே காண இடங்கொடுக்கும். நான்' என்பதைப்போல எனக்குத் தொந்தரவு கொடுக்கும் தூசி வேறு அறியேன்.[8]
  • கர்வமானது பிறருக்குத் தீங்கிழைக்கத் தூண்டாமல் நமக்கு நேர்ந்த தீங்கை மறைப்பதற்கு மட்டுமே நம்மைத் துண்டுமானால் தீயதன்று.[8]
  • சயித்தான் நம்மைத் தூண்டுவதில்லை. நாம்தாம் அவனைத் தூண்டுகிறோம் அவனுடைய திறமைக்கு வாய்ப்பளிக்கிறோம்.[9]
  • மக்கள் இறைவனிடம் இரக்கம் பெற நாம் அனுப்பிவிடுகிறோமே அன்றி. நாமாக இரக்கம் காட்டுவதில்லை.[10]
  • வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களைக் குறைக்க ஒருவெருக்கொருவர் உதவி செய்துகொள்வதற்கன்றி வேறெதற்காக நாம் உயிர் வாழ்கின்றோம்?[11]
  • ஈதலாகிய ஆடம்பரத்தை அறிய ஏழையாயிருத்தல் வேண்டும்.[12]
  • சில சமயங்களில் நமக்குப் பதிலாக நம் உணர்ச்சிகளே பேசுகின்றன. முடிவு செய்கின்றன. நாம் அருகில் நின்று வியந்துகொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. [13]
  • ஓய்வு போய்விட்டது. இராட்டினங்கள் போன இடத்திற்கு பொதிக்குதிரைகளும், கட்டை வண்டிகளும் போன இடத்திற்கு வீட்டு வாயிலில் கதிரொளி நிறைந்த மாலை நேரங்களில் சாமான்கள் கொண்டுவந்து கொடுத்த வியாபாரிகள் போன இடத்திற்கு, அதுவும் போய்விட்டது.[14]
  • நாம் நம் செயல்கைைளத் தீர்மானிப்பதுபோல், நம் செயல்களும் நம்மைத் தீர்மானிக்கின்றன. [15]
  • நம்பாமையைவிட அதிகத் தனிமையான தனிமை வேறு எது?[16]
  • பையில் துவாரமிருந்தால் அதில் பணத்தை நிரப்பிப் பலனில்லை.[17]
  • விஷயமில்லாத பொழுது விஷயமில்லை என்பதை வெளிக் காட்டாதவன் பாக்கியவான்.[18]
  • அனுதாபம் காட்டுமளவே அறநெறியில் முன்னேறுவதாகக் கூற முடியும்.[19]
  • * எல்லா ஞான உபதேசங்களைக்காட்டிலும், ஆலோசனைகளைக்காட்டிலும் அதிக உதவி செய்வது ஒரு துளி மானிட இரக்கமாகும்; அது நம்மைக் கைவிடாது.[20]
  • பழமையின் உறவுகளை அறுத்துவிடும் எதிர்காலத்தை நான் விரும்பவில்லை.[21]
  • ஆகப் பழங்காலத்தில் இருந்தவர்களும் இப்பொழுதும் நம்மீது ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.[21]
  • பெண்கள் மூடர்களாயிருக்கிறார்கள் என்பதை நான் மறுக்கவில்லை: மனிதர்களுக்குப் பொருத்தமா யிருப்பதற்காகவே சர்வவல்லமையுள்ள கடவுள் அப்படிப் படைத்திருக்கிறார்.[22]
  • மனிதர் அனைவருக்கும் மதமாகிய கடிவாளம் தேவை. 'மரணத்திற்குப்பின் யாதோ?’ என்னும் பயமே மதம்.[23]

குறிப்புகள்

[தொகு]
  1. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அடக்கம். நூல் 111- 112. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அதிர்ஷ்டம். நூல் 109- 110. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  3. 3.0 3.1 3.2 3.3 என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 13- 21. 
  4. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அறிவு. நூல் 52- 61. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  5. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 75-77. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  6. என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 6- 12. 
  7. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 78-81. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  8. 8.0 8.1 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கர்வம். நூல் 112- 113. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  9. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 85-86. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  10. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 105. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  11. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/இலட்சியம். நூல் 46- 50. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  12. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/ஈகை. நூல் 141-143. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  13. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 118-120. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  14. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 142-143. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  15. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 190-191. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  16. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 227. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  17. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நன்மை-தீமை. நூல் 50- 52. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  18. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நா' அடக்கம். நூல் 87- 88. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  19. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அனுதாபம். நூல் 77- 78. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  20. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 27-29. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  21. 21.0 21.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 262-263. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  22. [1]
  23. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/மதம். நூல் 38-42. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஜார்ஜ்_எலியட்&oldid=36955" இலிருந்து மீள்விக்கப்பட்டது