வாழ்க்கை வரலாறு
Appearance
வாழ்க்கை வரலாறு (Biography) என்பது ஒருவருடைய வாழ்க்கையின் முழுமையான விளக்கவுரையாகும். இது ஒருவருடைய கல்வி, வேலை, உறவுகள் மற்றும் இறப்பை மட்டும் உள்ளடக்கியதல்ல. ஒருவருடைய வாழ்க்கைச் வரலாறு என்பது அவருடைய வாழ்க்கை நிகழ்வுகளை விளக்கமாக வர்ணிப்பதாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- நல்ல முறையில் நடத்திய ஜீவியத்தைப் போலவே நல்ல முறையில் எழுதிய ஜீவிய சரிதமும் அபூர்வமானதாகும். -கார்லைல்[1]
- மனித சமூகத்திற்கு முதன்மையான ஆசிரியர்கள் பெரிய மனிதர்களின் வாழ்க்கைச் சரிதைகளே. - ஃபௌவர்[2]
- பழங்காலத்தில் பெரும் புகழ் பெற்று விளங்கியவர்களின் வரலாறுகளை அறியாமலிருப்பது. நம் வாழ்நாள் முழுவதும் குழந்தைகளாக இருப்பது போன்றது. - புளுடார்க்[2]
- படிப்பவைகளுள் மிகவும் இன்பமானவை. பயன்தரத்தக்கவை வாழ்க்கை வரலாறுகளே. - லாண்டர்[2]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/ஜீவிய சரிதம். நூல் 178-179. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ 2.0 2.1 2.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 313. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.