தொடர்ந்து பிரச்சாரம் செய்வதால் பொய் உண்மையாகாது ; யாவரும் கவனிக்கவில்லை எனில் உண்மை பொய் ஆகாது.பொது மக்கள் துணையின்றியும் உண்மை நிலைத்து நிற்கும்.அது தன்னிலையுடையது.
பரிசோதனைகளின் முடிவுகள் ஒரு கோட்பாட்டுக்கு எத்தனை முறை ஒத்துப் போனாலும் சரி, அடுத்த முறை அம்முடிவு அக்கோட்பாட்டுடன் முரண்படாது என்பதற்கு உறுதியேதுமில்லை.
என்னுடைய வாழ்க்கை முழுவதிலும் அன்பு மற்றும் வெறுப்பு இவற்றில் ஒன்றை நான் தேர்வு செய்ய வேண்டியிருந்தது. நான் அன்பைத் தேர்ந்தெடுத்தேன். இதோ இங்கிருக்கிறேன்.
இயற்கை வளம் என்பது வங்கியில் இருக்கும் பணம் போன்றது. அதன் வட்டியை மட்டும் எடுத்துக்கொள்வது தான் நியாயம். பேராசையில் முதலிலேயே கை வைத்தால் மழைக்காலத்தில் கூட நூறு டிகிரி வெயிலைத் தவிர்க்க முடியாது.
உணவு பற்றாக்குறை ஏற்பட்டால், அது இயற்கையின் உற்பத்தி சக்தி பற்றாக்குறையினால் ஏற்பட்டதாக இருக்காது. மனிதனின் அபரிமிதமான ஆசையின் விளைவாகவே அது ஏற்பட்டிருக்கும்.