விவிலியம்
Jump to navigation
Jump to search
விவிலியம் (திருவிவிலியம், Bible), என்பது யூதர் மற்றும் கிறித்தவர் ஆகியோரின் புனித நூலாகும். பல தனித்தனி நூல்களை உள்ளடக்கிய விவிலியமானது, ஒரு நூல்தொகுப்பாக இருப்பதோடு மட்டுமன்றி, உலகில் அதிக மொழிகளில் பெயர்க்கப்பட்ட நூல் என்ற பெருமையையும் கொண்டுள்ளது. ஒரே பெயரைக் கொண்டிருப்பினும் யூதர், கிறிஸ்தவரது விவிலியங்கள் வெவ்வேறானவையாகும்.
மேற்கோள்கள்[தொகு]
அடக்கம்[தொகு]
- தன்னைத்தானே உயர்த்திக்கொள்பவன் தாழ்த்தப்படுவான். தன்னைத்தானே தாழ்த்திக்கொள்பவன் உயர்த்தப்படுவான்.[1]
அன்பு[தொகு]
- அன்பு பொறுமையும் கருணையும் உள்ளது. அன்பு பொறாமைப்படாது, பெருமையடிக்காது, தலைக்கனம் அடையாது, கேவலமாக நடந்துகொள்ளாது, சுயநலமாக நடந்துகொள்ளாது, எரிச்சல் அடையாது, தீங்கை கணக்கு வைக்காது, அநீதியைக் குறித்து சந்தோஷப்படாமல் உண்மையைக் குறித்து சந்தோஷப்படும். எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளும், எல்லாவற்றையும் நம்பும், எல்லாவற்றையும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கும், எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளும். அன்பு ஒருபோதும் ஒழியாது. -விவிலியம் 1 கொரிந்தியர் 13:4-8
ஈகை[தொகு]
- கையில் வைத்துக்கொண்டே இன்று போய் நாளைவா என்று கூறாதே.[2]
செல்வம்[தொகு]
- ஊசித்துவாரத்தில் ஒட்டகம் நுழைந்தாலும் நுழையலாம். பணக்காரன் மட்டும் ஒருநாளும் கடவுள் ராஜ்யத்துக்குள் நுழைய முடியாது. [3]
குறிப்புகள்[தொகு]
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அடக்கம். நூல் 111- 112. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/ஈகை. நூல் 141-143. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/செல்வம். நூல் 99- 106. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.