ஈகை

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

ஈகை என்பது கொடையிலிருந்து வேறுபட்டது ஆகும். ஈகை குறித்து திருவள்ளுர் பதில் உதவி செய்ய முடியாத ஏழைகளுக்குக் கொடுப்பதே ஈகையாகும். பிற கொடைகள் யாவும் பயன் எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மையை உடையது என்கிறார். இதிலிருந்து ஈகை என்பது வறியவர்களுக்கு பதில் உதவி எதிர்பாராது கொடுக்கும் சிறு உதவியே ஈகை எனக் கொள்ளலாம். இதை திருவள்ளுவர் கீழ் கண்ட குறளின் வழியாக உணர்த்துகிறார்.

திருவள்ளுவர்[தொகு]

வறியார்க்குஒன்று ஈவதேஈகை; மற்று எல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து

ஜான் ரஸ்கின்[தொகு]

  • ஈகையைச் செய்யும் போது விளையும் பயன் குறித்து; நன்மை செய்யவோ, இன்பம் அளிக்கவோ இருக்கின்ற மன ஆசைதான், அதன் பொழிவு அதாவது சாறு, அதாவது சாரம் என்பது மட்டும் உறுதி.[1]
  • அன்பு முக்கியமாக வளர்வது ஒருவருக்கு ஒருவர் வழங்கிடும் ஈகை என்ற தத்துவ உணர்விலேதான்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 6- 12. 
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஈகை&oldid=15388" இருந்து மீள்விக்கப்பட்டது