செல்வம்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

செல்வத்தை பற்றி மேற்கோள்கள்.

மேற்கோள்கள்[தொகு]

 • தாமரையின் காதலனான சூரியன் தடாகத்தில் தண்ணீர் இல்லாத போது அத்தாமரைக்கே பகைவனாகி விடுகிறான். எவரிடம் செல்வம் இல்லையோ அவருக்கு நண்பர்கள் ஏற்படுவதில்லை.
  • நஹீம்
 • தங்கக் கட்டாரியைப் பெற்று யாவரும் வயிற்றில் குத்திக்கொள்ள மாடார்கள். மனம் எவ்வளவு விரும்பினாலும் அநியாயத்தாலும், தகாத வழியாலும் செல்வத்தைத் தேடாதே. கட்டாரி கட்டாரியே. அநியாயம் அநியாயமே. அதனால் பெறும் செல்வத்தால் நலம் விளைவதில்லை.
  • கவி விருந்தா
 • பொருளுக்கு மனிதன் அடிமை. பொருள் யாருக்கும் அடிமையில்லை.
  • வடமொழிக் கவிஞர்
 • செல்வச் செருக்கர்கள் தங்களுடைய உடைமையை மர்ருமல்ல , உள்ளத்தையும் கூட அடமானம் வைக்கத்தயங்க மாட்டார்கள்.
  • மார்க்ஸிம் கார்க்கி
 • அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகம் இல்லை;பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகம் இல்லை.
  • திருவள்ளுவர்
 • செல்வனாய் இருப்பதிலும் பார்க்கச் செல்வனாய் வாழ்வதே மேல்.
  • சாமுவேல் ஜான்சன்.
 • குழந்தை இல்லாதவனுக்கு இல்லம் சூனியம்; உறவினர் இல்லாதவர்களுக்குத் திசைகள் அனைத்தும் சூனியம்; அறிவற்றவனுக்கு உள்ளம் சூனியம்; வறுமை உடையவர்களுக்கு அனைத்துமே சூனியம் (வெறுமை)
  • ஒரு வடமொழிக்கவிஞர்
 • ஓடம் போவதற்கு நீர் தேவையே. நீர் இன்றி ஓடம் இல்லை. ஆனால் ஓடத்திற்கு ஆதாரமான் நீர் ஓடத்திற்கு வெளியே இருக்கவேண்டுமேயன்றி உள்ளே அன்று. சமூகத்தின் செல்வமும் இத்தகையதே. செல்வம் ஒவ்வொரு வீட்டின் உள்ளே தங்கி விடாமல் சமூக ஓடத்திற்கு வெளியில் அது மிதப்பதற்கு ஆதாரமாய் அமையவேண்டும்.
 • நம்மிடமுள்ள செல்வத்தை அடுத்தவனுக்கு உதைத்துத் தள்ள வேண்டும். அவர் மற்றொருவரிடம் உதைத்து விட வேண்டும். கால் பந்தைப் போல செல்வம் எப்பொழுது மாறி மாறி அனுப்பப்படுகிறதோ அப்பொழுது அது பெருகி வளரும்
  • வினோபாஜி.
 • பணத்திற்கு நீ தலைவனாக இருந்தால் அதை நல்ல செயல்களுக்குப் பயன்படுத்துவாய். அத?ற்கு நீ அடிமையாக இருந்தால் அது உன்னை தீய செயல்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளும்.
  • ஆப்பிரிக்கப் பாதிரியார்.
 • பொருளாசை ஓவியன் ஒருவனைக் கூட உண்டாக்கியதில்லை. ஆனால், அநேகரைக் கெடுத்துள்ளது.
  • வாஷிங்டன் ஆல்ஸ்டன்
 • இன்பம்தான் ஒரு மனிதனுடைய செல்வம்; அறியாமைதான் துயரத்தின் தாய்.
  • இங்கர்சால்.
 • உங்கள் செல்வம் எல்லாமே உங்களுடையது என்றால், ஏன் இந்த உலகை விட்டு நீங்கள் செல்லும் போது அவற்றை எடுத்து செல்லக் கூடாது?

வெளி இணைப்புகள்[தொகு]

Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


Wiktionary
விக்சனரியில் இருக்கும் செல்வம் என்ற சொல்லையும் பார்க்க.
"https://ta.wikiquote.org/w/index.php?title=செல்வம்&oldid=8683" இருந்து மீள்விக்கப்பட்டது