டேனியல் வெப்ஸ்டர்
Appearance
டேனியல் வெப்ஸ்டர் (Daniel Webster, 18, சனவரி, 1782 - 24, அக்டோபர், 1852) என்பவர் ஒரு அமெரிக்க அரசியல்வாதி ஆவார்,
மேற்கோள்கள்
[தொகு]- அடிமைமுறை மாபெரும் ஒழுக்கக்கேடு. அரசியல் சாபத்திடு என்று நான் இளமையிலிருந்தே கருதி வந்திருக்கிறேன். அது அநீதியானது மனித சமூகத்தின் இயற்கையான சமத்துவத்திற்கு விரோதாரமானது; அது அதிக வல்லமையை மட்டும் ஆதாரமாக்க் கொண்டது என்று நான் கருதுகிறேன்: மெலியாரை வலியார் வென்று நிரந்தரமாக ஆண்டு அடக்குவதாகும். - ஆண்டான்களும் அடிமைகளும்) வெவ்வேறு இனத்தவர்கள் என்று போலிக்காரணம் காட்டுவதையும் நான் கண்டித்திருக்கிறேன். கறுப்பு இனத்தார் (நீக்ரோக்கள்) பலவீனமாக இருந்தால் அவர்களை அடிமைப்படுத்திக் கொடுமை செய்யக்கூடாது என்பதற்கே அது ஏற்ற காரணம் என்றும் நான் சொல்லியிருக்கிறேன்.[1]
- நீதியில்லாத எந்த அரசாங்கமும் மதிக்கத்தக்கதன்று. அப்பழுக்கில்லாத மக்கள் நம்பிக்கையைப் பெறாமலும், பொது மக்களுக்கான புனிதக் கொள்கை, விசுவாசம், கெளரவம் ஆகியவை இல்லாமலும் இருந்தால், வெறும் அரசாங்க அங்கங்களும், சட்ட நிர்வாகமும் மட்டும் அரசியல் சமூகத்திற்குப் பெருமையுண்டாக்க முடியாது.[2]
- நம் காலத்தில் அறிவு தவறான எண்ணங்களையும் துவேஷத்தையும் வென்று வருகின்றது. உலகமே நம் அறிவுக் கூர்மையைப் பயன்படுத்தத்தக்க களனாக மாறி வருகின்றது. உள்ளத்தின் ஆற்றலும். மேதா விலாசமும் வலிமையும் எந்த இடத்திலும், எந்த மொழியிலும் பேசலாம். உலகம் அதைக் கேட்கும். [3]
- ஒருவன் வெற்றி வீரனாகவோ, அரசனாகவோ, நீதிபதியாகவோ வாழ்ந்திருக்கலாம்; ஆனால், அவன் மனிதனாகவே மரிக்க வேண்டும்.[4]
- செல்வத்தை உண்டாக்குவது உழைப்பு: எல்லா விஷயங்களையும் இயக்குவது அதுவே.[5]
- எதேச்சாதிகாரத்தை அலைத்து ஆட்டக்கூடிய சக்தி ஒன்று மக்களிடம் இருக்கின்றது. அது மின்னல், புயல், பூகம்பம் ஆகியவைகளைவிட் மேலான ஆற்றலுள்ளது. அது நாகரிகஉலகம் முழுவதும் கோபிக்கக்கூடும் என்று உணரும் அச்சமேயாகும்.[6]
குறிப்புகள்
[தொகு]- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல். நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 43-46. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 69-75. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 296-297. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 128-129. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 33-37. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.