அறிவுடைமை

விக்கிமேற்கோள் இலிருந்து

அறிவுடைமை குறித்த மேற்கோள்கள்.

  • அணியெல்லாம் ஆடையின் பின்-பழமொழி நானூறு
  • அறிவைப் பெற்றிருந்தால் அதை உபயோகிக்க வேண்டும், உனது அறியாமையை ஒப்புக்கொள்வது போல, அறிவை அடைந்திருந்தால் போதாது. -கன்ஃபூசியஸ்[1]
  • அறியும் பெரிதாள் பவனே பெரிது-பழமொழி நானூறு
  • அறிவுடைமைக்கு முதற்படி நாம் அறியாமையில் இருக் கிறோம் என்பதை உணர்தல். -ஸெஸில்[1]
  • பூரணமாகத் தெரிந்துகொள்ளாத விஷயம் நம் அறிவில் சேராது. - கதே[1]
  • நாம் சொற்ப விஷயங்களைப்பற்றி மட்டும் அறிந்திருந்தால் எதையும் துல்லியமாகத் தெரிந்திருக்க முடியும் அறிவு பெருகும் பொழுது ஐயமும் பெருகுகின்றது. - கதே[1]
  • மனிதன் பிரபஞ்சத்தின் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்காகப் பிறந்தவனில்லை; தான் செய்ய வேண்டியதைக் கண்டுகொள்வதே அவன் கடமை; அவன் தனக்குத் தெரிந்த அளவின் எல்லைக்குள் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். - கதே[1]
  • என்னைவிட அதிகமாய்த் தெரிந்துகொண்டுள்ள மனிதனிடம் நான் பொறாமை கொள்வதில்லை. ஆனால், என்னைவிடக் குறைவாகத் தெரிந்தவர்களிடம் இரக்கம் கொள்கிறேன். -ஸர். டி. மிரெளன்[1]
  • அறிவுட்மையே வலிமை என்று பேக்கன் சொல்லியிருக்கிறார். ஆனால், வெறும் அறிவு வலிமையாகிவிடாது. அது, வலிமையாகக் கூடும். செயல்தான் வலிமை அதிலும், அறிவினால் வழிகாட்டப்பெறும் செயலே தலைசிறந்தது. -டி. டபுள்யு. பால்மெர்[1]
  • அறிவில் உண்மையான முன்னேற்றம் பெற விரும்புவோன் தன் முதுமையையும் இளமையையும் பின்னால் பெற்ற நன்மைகளையும், முன்னால் அடைந்த பலன்களையும் உண்மையின் பலிபீடத்தில் சமர்ப்பிக்க வேண்டும். - பெர்க்வி[1]
  • எல்லா விஷயங்களையும் நாம் அறிந்துகொள்ள வேண்டுவது அவ்வளவு முக்கியமில்லை. ஆனால், அதனதன் மதிப்பை உணர்ந்துகொள்வதுதான் அவசியம். நாம் கற்றுக் கொண்டதைப் போற்ற வேண்டும். நமக்குத் தெரிந்தவைகளை முறைப்படுத்தி வைத்துக்கொள்ளவேண்டும். - எச். மூர்[1]
  • அரசாங்கத்திற்கு உண்மையான அடிப்படை அறிவுடைமை; அறியாமை அன்று. கல்வியைப்பற்றியோ, கலாசாரம் பற்றியே மனித சமூகத்தின் அறிவுப் பொக்கிஷங்களான நூல்களைப் படிப்பதுபற்றியோ ஏளனம் செய்தல், அறிவு நுட்பத்தோடு சுதந்தரமாயிருப்பதை ஏளனம் செய்தல் தேச சமூகம் தாழ்மையுற்று அழிவடைய வழியாகும். - ஜி. டபுள்யு கர்ட்டிஸ்[1]
  • செல்வம் பெருகப்பெருக அதில் ஆசை அதிகமாவது போல. அறிவு பெருகப்பெருக அதில் ஆர்வம் அதிகமாக வளரும் - ஸ்டெர்னி[1]
  • அறிவுடைமையால் வரும் இன்பமும் மகிழ்ச்சியும் இயற்கையில் கிடைக்கும் மற்றவைகளைவிட மிகவும் மேலானவை. மற்ற இன்பங்களிளெல்லாம் தெவிட்டுதல் உண்டு. இதில் தெவிட்டுதலே இல்லை, மற்றவைகளில் புதுமைதான் இன்பமளித்ததே தவிர அவைகளின் தன்மை அன்று. தெவிட்டுதலால், காம விகாரமுற்றவர்கள் துறவிகளா வதையும். பேராசையுள்ள அரசர்கள் வெறுப்புற்று வருந்துவதையும் நாம் காண்கிறோம். ஆனால், அறிவுடைமையில் தெவிட்டுதலில்லை. அதைப்ப்ற்றிய திருப்தியும் ஆவலும் எளிதில் மாறிமாறி ஏற்படுகின்றன. - பேக்கன்[1]
  • ஒவ்வொரு வழியிலும் அறிவைப் பெறுவது புத்திசாலித் தனமாகும். ஒரு குடிகாரன், ஒரு பானை, கையில் அணியும் உறை அல்லது பழைய செருப்பு ஆகியவற்றிலிருந்தும் அறிவு பெறலாம். - ராப்லே[1]
  • அறிவுடைமை வலிமையைவிடப் பெரிது. இயந்திர நுணுக்கங்கள் தெரிந்தவன் வெறும் வலிமையைக் கண்டு சிரிக்கிறான். - ஜான்ஸன்[1]
  • அறிவை அளித்திருப்பதன் நோக்கம் அதை அடைத்து வைத்திருப்பதற்காக அன்று. ஆனால், பிறருக்கு அளிப்பதற்காக இந்த அரிய ஆபரணத்தை மறைத்து வைத்திருந்தால் அதன் பெருமையை இழந்ததாகும். - பிஷப்ஹால்[1]
  • ஒரு மனிதனுடைய வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கு அவன் என்ன செய்கிறான் என்பதைமட்டும் தெரிந்து கொண்டால் போதாது. அவன் எதை வேண்டுமென்றே செய்யாது விடுகிறான் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். - சிளாட்ஸ்டன்[1]
  • அறிவின் ஒவ்வொரு துறையிலும் ஆர்வம் கொள்வது மனம் வளர்ச்சியடைவதற்கு அவசியமாகும். அதன் மூலமே மிக உயர்ந்த அளவுக்குத் தெளிவு பெறமுடியும். -லாக்[1]
  • மனப்பாடம் செய்து தெரிந்துகொள்வது அறிவுடைய செயல் அன்று அதை ஞாபகத்தில் பதிய வைத்தலே. - மாண்டெயின்[1]
  • நாம் பெற்றுள்ள அறிவு. சாமான்கள் கண்டபடி சிதறிக் கிடக்கும் ஒரு பெரிய கடையைப் போல இருக்கக்கூடாது. இருப்புச் சாமான்களுக்கு ஒரு பட்டியல் இல்லாமலும் இருக்கக்கூடாது. நமக்கு என்னென்ன தெரியும் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். அவசியம் ஏற்படும்பொழுது அவைகளை நாம் பயன்படுத்திக்கொள்ளவும் திறமை பெற்றிருக்க வேண்டும். - லிப்னிட்ஸ்[1]
  • நமக்கு முன்னால் தினசரி வாழ்க்கையில் காணப்பெறும் பொருள்களைத் தெரிந்துகொள்வதே முக்கியமான அறிவு இதற்கு மேற்பட்டனவெல்லாம் புகை அல்லது வெறுமை அல்லது அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமேயாகும். இவை நமக்கு முக்கியமாகத் தேவையுள்ள விஷயங்களில் நமக்குப் பழக்கமில்லாமலும் நம்மைத் தயாரித்துக்கொள்ள வாய்ப்பில்லயலும் செய்துவிடும். - மில்டன்[1]
  • நம் காலத்தில் அறிவு தவறான எண்ணங்களையும் துவேஷத்தையும் வென்று வருகின்றது. உலகமே நம் அறிவுக் கூர்மையைப் பயன்படுத்தத்தக்க களனாக மாறி வருகின்றது. உள்ளத்தின் ஆற்றலும். மேதா விலாசமும் வலிமையும் எந்த இடத்திலும், எந்த மொழியிலும் பேசலாம். உலகம் அதைக் கேட்கும். -டேனியல் வெப்ஸ்டர்[1]
  • செய்து முடித்த காரியங்களைப்பற்றி ஒரு மனிதன் எவ்வளவு விரிவான அறிவு பெற்றிருக்கிறானோ அந்த அளவுக்கு அவன் செய்ய வேண்டிய காரியங்களை அறிவதற்கு அது உதவியாகும். -டிஸ்ரேலி[1]
  • உலக அமைதிக்கு நிலையான பயனுள்ள ஒரே வழி உண்டு. ஓயாமல் சோதனைகள் நடக்கும் உலகத்தைப் பற்றி அதிகமாய்த் தெரிந்துகொள்வதே அது. -வால்டர் விப்பன்[1]
  • வாழ்க்கைக் தத்துவத்தின் முக்கியமான பகுதி நம் கடமைகளைப்பற்றித் தெரிந்துகொள்வது. கடமையிலிருந்து நீங்கள் வழுவினால், உலகம் அதன் பயனை எதிர்பார்த்து நிற்கும். -கெதால்ஸ்[1]
  • நீ அறிவு பெற்றிருந்தால், அந்தச் சுடரில் மற்றவர்களும் தங்கள் விளக்குகளை ஏற்றிக்கொள்ளட்டும். -ஃபுல்லர்[1]
  • நாம் கஷ்டப்பட்டுச் சேர்த்துள்ள அறிவு ஓர் உடமையாகும் அது முற்றிலும் நமக்கே சொந்தமான உடமை - கார்லைல்[1]
  • அறிவையும் உத்திரக் கட்டையையும், அவை பக்குவமடைகிற வரையில், அதிகமாக உபயோகிக்கக்கூடாது -ஜோம்ஸ்[1]
  • முற்காலத்தில் உலகை ஆண்டவர்களுக்குக் கிடைக்காத ஓர் ஆயுதத்தைக் கையில் ஏந்திக்கொண்டு நாம் எதிர் காலத்தை நோக்கி நிற்கிறோம். அந்த ஆயுதமே விஞ்ஞான அறிவும். ஆராய்ச்சி மூலம் அதை எல்லையற்ற அளவில் பெருக்கிக் கொள்ளும் ஆற்றலும். -ஸர் ஜேம்ஸ் ஜின்ஸ்[1]
  • அற்ப அறிவு அபாயகரமாது என்றால் அந்த அபாயத்திலிருந்து தப்பும் அளவுக்கு, அதிக அறிவு பெற்ற மனிதன் எங்கேயிருக்கிறான்? -டி. எச். ஹக்ஸ்லி[1]
  • நமது முதுமையில் நாம் ஒதுங்கியிருந்து இதமடைய இன்றியமையாத பாதுகாப்பு அறிவுடைமையே இளமையிலேயே நாம் அதை நட்டு வைக்காவிட்டால், நாம் முதுமையடையும் பொழுது. அதனால் நிழல் எதுவும் தர முடியாது -செஸ்டர்ஃபீல்டு[1]
  • இங்கே நாம் தெரிந்துள்ளது சொற்பம், நாம் அறியாதது அளவற்றது. லாப்லேஸ்[1]
  • நான்கு மொழிகள் கற்றவன் நான்கு மனிதர்களுக்கு ஈடாவான் என்று ஐந்தாவது சார்லஸ் மன்னர் கூறினார். தமக்கு வாழ்வளித்த தம் தந்தை ஃபிலிப்பைக்காட்டிலும், தமக்கு அறிவளித்த குரு அரிஸ்டாட்டலுக்கே தாம் கடமைப்பட்டிருப்பதாக அலெக்சாண்டர் கூறியுள்ளார்.[1]
  • பல கலைகளையும் பருக முயல்பவன் ஒரு கலையையும் பருகான். - ஃபுல்லர்[1]
  • மனிதனை அறிவாளியாகச் செய்ய முடியாத அறிவின் பெரும் பகுதி. அவனை ஆணவம் பிடித்தவனாயும் பயனற்றவனாயும் செய்துவிடுகின்றது. - அடிஸன்[1]
  • அறிவின் பெருக்கத்திற்காகப் போடும் விடுமுதல் எப்பொழுதும் மிக உயர்ந்த வட்டியையே கொடுக்கும். - ஃபிராங்க்லின்[1]
  • மானிட அறிவு, இறைவனின் ஆசியைப் பெற்று. நம்மைத் தெய்விக அறிவுக்கு அழைத்துச் செல்கின்றது. - பிஷப் ஹார்ன்[1]
  • அறியத் தகாத விஷயங்களை அறியாதிருத்தல் அறிவுடைமையின் ஒரு பகுதியாகும். - கிரேட்ஸ்[1]
  • சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
    நன்றின்பால் உய்ப்பது அறிவு. - திருவள்ளுவர்[1]
  • எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு. - திருவள்ளுவர்[1]
  • அறிவது அறிந்து அடங்கி, அஞ்சுவது அஞ்சி.
    உறுவது உலகுஉவப்பச் செய்து - பெறுவதனால்
    இன்புற்று வாழும் இயல்புடையார் எஞ்ஞான்றும்
    துன்புற்று வாழ்தல் அரிது. - நாலடியார்[1]
  • அறிவினால் மாட்சி ஒன்றுஇல்லா ஒருவன்
    பிறிதினால் மாண்டது எவனாம்? - பழமொழி[1]
  • மேதைக்கு - உரையாமை செல்லும் உணர்வு. - சிறுபஞ்சமூலம்[1]
  • ஒட்டிய - காட்சி திரியின் அறம் திரியும். -அறநெறிச்சாரம்[1]
  • கற்றது உடைமை காட்சியின் அறிப. - முதுமொழிக்காஞ்சி[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 1.18 1.19 1.20 1.21 1.22 1.23 1.24 1.25 1.26 1.27 1.28 1.29 1.30 1.31 1.32 1.33 1.34 1.35 1.36 1.37 1.38 1.39 1.40 1.41 1.42 1.43 1.44 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 69-75. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=அறிவுடைமை&oldid=22250" இலிருந்து மீள்விக்கப்பட்டது