ஆசை
Appearance
ஆசை (want) என்பது தமக்கெது தேவையோ அதனை கொண்டு வருவதற்கான உணர்வாகும். ஒவ்வொருவருக்கும் தேவைகள் மாறுபட்டாலும் ஏதாவது தேவைகள் கண்டிப்பாக இருந்து கொண்டே இருப்பதனால் ஆசையும் அழிவில்லாது இருந்து கொண்டே இருக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- அளவில்லாத ஆசை, நமது குணங்களை எல்லாம் அழித்துவிடும். - மகாவீரர்
- உள்ளத்தின் உறுதியோடு கொள்ளும் நியாயமான ஆசை காலப்போக்கில் நிறைவேறாமல் போகாது. - விளாதிமிர் லெனின்
- எந்தப் பொருளின் மீது ஆசை இல்லையோ அவற்றினால் துன்பம் இல்லை. - ஔவையார்
- ஆசையின் வேட்கையை அடக்கவும் முடியாது. தீர்த்து வைக்கவும் முடியாது. - ஸீஸெரோ[1]
- ஆசைகளைக் குறைத்துக்கொள்வதிலேயே அமைதி இருக்கின்றது. அவைகளைத் திருப்தி செய்வதிலன்று-.ஹீபர்[1]
- ஒரு மனிதனுடைய ஆசைகள் எல்லையற்றவைகளாக இருந்தால், அவனுடைய முயற்சிகளும் எல்லையற்றவைகளாக ஆகிவிடும். - பால்கி[1]
- நம்முடைய தற்போதைய நிலைக்குத் தக்கபடி நாம் நம் ஆசைகளைச் சுருக்கிக் கொள்ள வேண்டும். இது வாழ்க்கையின் அவசியமான ஒரு விதியாகும். எதிர்பார்ப்பவைகள் எப்படியிருப்பினும் நம்மிடம் உள்ளவைகளுக்குத் தக்கபடி நாம் வாழ்ந்து வர வேண்டும். -அடிஸன்[1]
- முறையற்ற ஆசைகள் பூர்த்தியான பிறகு தண்டனைை அனுபவிக்கிறோம். நிறைவேற முடியாத ஆசைகள் தோன்றுபோதே தண்டனையும் வந்துவிடுகின்றது. - ஸவிப்ர் ஃயிஸிட்ஸ்[1]
- நாம் எவ்வளவு செல்வம் பெற்றிருப்பினும், எவ்வளவு உயர்ந் பதவியிலிருப்பினும், குறைவாகத் தோன்றும் நம் செல்வத்தை நிறைவுபடுத்தப் பெயரில்லாத ஏதோ ஒன்று மேலும் தேவையாகத் தோன்றுகின்றது. -ஹொரேவி[1]
- ஆசைகளும் உணர்ச்சிகளும் ஒரு கயிற்றின் இரண்டு பிரிகளைப் போல, ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டு இதயத்தைச் சுற்றி இறுக்கமாகப் பிணைந்துகொள்கின்றன நாம் அவைகளை நிதானமாகப் பயன்படுத்திக்கொண்டால் நன்மை விளையும், அளவுக்கு அதிகமானால் அழிவு நிச்சயமாகிவிடும். -பர்டன்[1]
- ஆசைகளை அறவே அவித்துவிட்டால், மனமும் அவிந்துவிடும். உணர்ச்சிகளே இல்லாத மனிதன் செயலுக்குரிய தூண்டுகோலோ, தத்துவமோ இல்லாமல் போய் விடுவான். - ஹெல்விடியா[1]
- நம் ஆசைகளை வெட்டிக் குறைத்துக்கொண்டு. நடுநிலையான முறைகளால், சில ஆசைகளை மட்டும் நிறைவேற்றி கொள்ளல் என்பது, செருப்புகள் தேவை என்பதற்காகக்காக, பாதங்களையே வெட்டிவிடுவது போலாகும். -ஸ்விஃப்[1]
- அவசியம் என்பது முடிவடையும் பொழுது. ஆசையும் மேலும் அறியவேண்டுமென்ற துடிப்பும் தொடங்குகின்றன. இயற்கையின் தேவையை அனுசரித்து நமக்கு வேண்டியன யாவும் கிடைத்துவிட்ட பிறகு, என்னென்ன வேண்டும் என்ற செயற்கையாக ஆசைகளை வளர்த்துக் கொள்கிறோம். -ஜான்ஸ்[1]
- அவா இல்லார்க்கு இல்லாகும் துன்பம். - திருவள்ளுவர்[1]
- தூஉய்மை என்பது அவா இன்மை. - திருவள்ளுவர்[1]
- குருடனைக்காட்டிலும் குருடன் எவன்? ஆசையுள்ளவன். - ஆதிசங்கரர் [1]
- ஆசையற்றவனே அகில உலகிலும் மிகப்பெரும் பணக்காரன். - சுவாமி சிவானந்தர்[1]
- அவாவினால் உந்தப்பட்ட மனிதர்கள். வேட்டையில் விரட்டப்பட்ட முயலைப் போல், ஓடித் திரிகிறார்கள். ஆதலால், மோக பந்தங்களிலிருந்து விடுதலை பெற விரும்பும் பிக்கு அவாவை ஒழிப்பானாக. - புத்தர்[1]
பழமொழிகள்
[தொகு]தமிழ் பழமொழிகள்
[தொகு]- அற்ப ஆசை கோடி தவத்தைக் கெடுக்கும்.
- ஆசை இருக்கு ஆனை மேல் ஏற; அம்சம் இருக்கு மண் சுமக்க!
- ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு!
- ஆசை வெட்கம் அறியாது.
- ஆசை இருக்கு தாசில் பண்ண அதிருஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க.
- ஆசைக்கு ஒரு பெண்ணும், ஆஸ்திக்கு ஒர் ஆணும்!!
- உப்பில்லா பத்தியக்காரன் ஊறுகாய்க்கு ஆசைப்பட்டானாம்!
- ஐம்பதிலும் ஆசை வரும்.
- கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
- காணி ஆசை கோடி கேடு.
- கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.
- முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் பட்டாற்போல!..
- வட்டி ஆசை முதலுக்கு கேடு.
மலையாளப் பழமொழிகள்
[தொகு]- ஆயுள் உள்ளவர்க்கு ஆசை உண்டு.
- ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.
குறிப்புகள்
[தொகு]வெளியிணைப்புக்கள்
[தொகு]