ஆசை

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

ஆசை (want) என்பது தமக்கெது தேவையோ அதனை கொண்டு வருதற்கான உணர்வாகும். ஒவ்வொருவருக்கும் தேவைகள் மாறுபட்டாலும் ஏதாவது தேவைகள் கண்டிப்பாக இருந்து கொண்டே இருப்பதனால் ஆசையும் அழிவில்லாது இருந்து கொண்டே இருக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

 • அளவில்லாத ஆசை, நமது குணங்களை எல்லாம் அழித்துவிடும். - மகாவீரர்
 • உள்ளத்தின் உறுதியோடு கொள்ளும் நியாயமான ஆசை காலப்போக்கில் நிறைவேறாமல் போகாது. - விளாதிமிர் லெனின்
 • எந்தப் பொருளின் மீது ஆசை இல்லையோ அவற்றினால் துன்பம் இல்லை. - ஔவையார்

பழமொழிகள்[தொகு]

தமிழ் பழமொழிகள்[தொகு]

 • அற்ப ஆசை கோடி தவத்தைக் கெடுக்கும்.
 • ஆசை இருக்கு ஆனை மேல் ஏற; அம்சம் இருக்கு மண் சுமக்க!
 • ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு!
 • ஆசை வெட்கம் அறியாது.
 • ஆசை இருக்கு தாசில் பண்ண அதிருஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க.
 • ஆசைக்கு ஒரு பெண்ணும், ஆஸ்திக்கு ஒர் ஆணும்!!
 • உப்பில்லா பத்தியக்காரன் ஊறுகாய்க்கு ஆசைப்பட்டானாம்!
 • ஐம்பதிலும் ஆசை வரும்.
 • கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
 • காணி ஆசை கோடி கேடு.
 • கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.
 • முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் பட்டாற்போல!..
 • வட்டி ஆசை முதலுக்கு கேடு.

மலையாளப் பழமொழிகள்[தொகு]

 • ஆயுள் உள்ளவர்க்கு ஆசை உண்டு.
 • ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.

வெளியிணைப்புக்கள்[தொகு]

Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


Wiktionary
விக்சனரியில் இருக்கும் ஆசை என்ற சொல்லையும் பார்க்க.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஆசை&oldid=13972" இருந்து மீள்விக்கப்பட்டது