உள்ளடக்கத்துக்குச் செல்

சிட்னி ஸ்மித்

விக்கிமேற்கோள் இலிருந்து
சிட்னி ஸ்மித்

சிட்னி ஸ்மித் (Sydney Smith) (3 சூன் 1771 - 22 பெப்ரவரி 1845) ஒரு ஆங்கில, எழுத்தாளர் மற்றும் ஆங்கிலிகன் மதகுரு ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • எத்தகைய அறிவுத் திறன்களையும் நாம் பழிக்கக்கூடாது. அவை தனித்தனிப் பயன்களையும் கடமைகளையும் பெற்றிருக்கின்றன; மனிதனின் இன்பத்தையே அவை அனைத்தும் குறிக்கோளாகக் கொண்டுள்ளன. அவை நம்மை முன்னேறச் செய்கின்றன. உயர்த்துகின்றன. வாழ்க்கைக்கு இன்பமளிக்கின்றன.[1]
  • மெய் கலந்த தவறுகளே அபாயகரமானவை. மெய்க் கலப்பாலேயே அவைகள் எங்கும் பரவச் சாத்தியமாகின்றது.[2]
  • சுத்தப் பொய்யால் ஒரு நாளும் தொந்தரவு உண்டாவதில்லை.[2]
  • ஒரு மனிதன் மாற்றவே முடியாத சட்டம் என்று ஒன்றைப்பற்றிப் பேசினால், அவனை மாற்றவே முடியாத மனிதன் என்றுதான் எனக்குத் தோன்றுகின்றது.[3]
  • சோம்பல் தீய ஒழுக்கத்தையோ, கெடுதலையோ உண்டர்க்கா விட்டால், பொதுவாக அது துக்கத்தை உண்டாக்கும்.[4]
  • வாழ்க்கை பல நட்புறவுகளாகிய கோட்டைகளால் பாதுகாப்புப் பெற வேண்டும். அன்பு கொள்வதும், அன்பு பெறுவதும் வாழ்க்கையில் முதன்மையான இன்பங்கள்.[5]
  • படிப்போருடைய காலத்தை வீணாக்காமல் அதிகமான அறிவைக் கொடுக்கும் நூலை இயற்றும் ஆசிரியனே அதிகப் பயன் தருபவன் ஆவான்.[6]
  • ஒரு பொழுது கூடத் திறக்காவிடினும் சரி, ஒரு மொழிகூடப் படிக்காவிடினும் சரி, நூல்களைப் போல வீட்டை அலங்கரிக்கும் அழகான பொருள்கள் வேறு கிடையா.[7]
  • நூல்களைப் படிப்பது ஒன்றிலேயே காலம் முழுவதையும் செலவுசெய்வோர் சோம்பேறிகளில் பெரிய சோம்பேறிகள்.[8]
  • சிறந்தவர்களோடு மட்டும் நம் மனம் உறவாடுவதற்குச் சிறந்த புத்தகங்களையே தேர்ந்துகொள்ள வேண்டும்.[9]

குறிப்புகள்

[தொகு]
  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 67-68. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  2. 2.0 2.1 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வாய்மை. நூல் 23- 29. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  3. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 171-173. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  4. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 202. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  5. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 226-227. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  6. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/நூலியற்றல். நூல் 174-176. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  7. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/நூல்கள். நூல் 163-168. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  8. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/படித்தல். நூல் 168-171. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  9. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 251-252. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=சிட்னி_ஸ்மித்&oldid=22051" இலிருந்து மீள்விக்கப்பட்டது