உள்ளடக்கத்துக்குச் செல்

நம்பிக்கை

விக்கிமேற்கோள் இலிருந்து

நம்பிக்கை (belief) என்பது ஒரு உளவியல் சார்ந்த விடயமாகும். ஒருவர் அல்லது ஓரமைப்பு, ஒன்றின் மீது அல்லது ஒருவரின் மீது வைக்கும் மிகுந்தப் பற்று அல்லது கூடிய விருப்பு போன்றவற்றின் அடிப்படையில் அதனை உண்மை என நம்பும் நிலையிலேயே நம்பிக்கை மனித மனங்களில் ஏற்படுகின்றது. அது சரியானதாகவோ தவறானதாகவோ இருக்கலாம். உண்மையானதாகவோ உண்மையற்றதாகவோ கூட இருக்கலாம்.

மேற்கோள்கள்[தொகு]

 • மனித ஆளுமை அளவிட முடியாத திறன் வாய்ந்தது என்பதில் நான் திடமான நம்பிக்கை கொண்டுள்ளேன்; ஒவ்வொருவரும் ஒரு ஆக்கராக முடியும் - அவர்களின் தடயத்தை இவ்வுலகில் விட்டுச் செல்ல முடியும் ...
 • காற்றில் அலைக்கழிக்கப்படும் தூசு போல ஒன்றுக்கும் உதவாதவன் என்று எவருமே இருக்கக் கூடாது; ஒவ்வொருவரும் ஒளிர வேண்டும் - கோடானுகோடி விண்மீன் திரள்கள், ஒவ்வொன்றும் ஒளிருவதைப் போல... --- வாசிலி சுகோம்லின்ஸ்கி [1]
 • நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை. - அப்துல் கலாம்
 • நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு. - மார்டின் லூதர் கிங்
 • நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை - டிக்கன்ஸன் [2]
 • ரோஜா மலரும்போதே அழகு மிகுந்திருக்கும்; அச்சம் அகலும்போது அரும்பும் நம்பிக்கையே அதிக உள்சானம் அளிப்பதாகும்.- ஸ்காட்[3]
 • மனிதனை அழிக்கக்கூடிய ஒரே விஷயம் அழிவில் நம்பிக்கை வைப்பதே. - மார்ட்டின் பூபெர்[3]
 • நல்ல காலம் பிறக்கும் என்ற நம்பிக்கை தவிர நலிவோர்க்கு வேறு மருந்து கிடையாது. -ஷேக்ஸ்பியர்[3]
 • காருக்குப்பின் வேனில், இரவுக்குப் பின் பகல்; புயலுக்குப் பின் அமைதி. -அக்கம்பிஸ்[3]
 • நம்பிக்கையே மனிதனுக்கு நேரும் சகல நோய்களுக்கும் ஒரே மலிவான சஞ்சீவி. - கெளலி[3]
 • இரவில் சஞ்சலம் ஏற்பட்டாலும் அநேக சமயங்களில் காலையில் எல்லாம் சரிப்பட்டுப்போகும். -ஆவ்பரி[3]
 • நம்பிக்கையே துக்கத்தால் ஏற்பட்ட கறையைப் போக்கும். -மூர்[3]
 • எல்லாமொழிகளிலும் அதிக துக்ககரமானவை- அப்படிச் செய்திருந்தால்'- என்னும் மொழிகளே. -விட்டியர்[3]
 • ஆகாயத்தில் கட்டும் அரண்மனைகளை அழியாது வைத்திருக்க அதிகமான பொருள் தேவை -புல்வெர் லிட்டன்[3]
 • நம்பிக்கை என்பது விழித்திருக்கும் நிலைமையில் காணும் கனவு. -பிளினி[3]
 • நம்பிக்கை என்பது ஒருநாளும் இதயத்திலிருந்து அழிந்து போவதில்லை. மனிதன் என்றும் ஆசீர்வதிக்கப்பட வேண்டியவனே யன்றி ஆசீர்வாதம் தருபவனல்லன். -போப்[3]
 • நம்பிக்கை நடத்தும் விருந்துக்குச் செல்ல விரும்பாதவர் கிடையார். -காஸ்காயின்[3]
 • நம்பிக்கை எதிர் காலத்துக்கு ஒளி தரும்; ஞாபகம் இறந்தகாலத்துக்கு முலாம் பூசும். -மூர்[3]
 • நம்பிக்கை என்பது அதிர்ஷ்ட தேவதை நடத்தும் ஏமாற்று லாட்டரியாகும். அதில் நூற்றுக்கு ஒருவர்க்கே பரிசு உண்டு. - கெளலி[3]
 • உயிருள்ளவரை நம்பிக்கையும் இருந்துகொண்டிருக்கும். -கே[3]
 • சாத்தியம் என்று நம்புவோர்க்கே எதுவும் சாத்தியமாகும். -வெரிஜில்[3]
 • உன்னையே நீ நம்பு. -நிக்கோலோ மாக்கியவெல்லி[4]
 • நன்மைகள் ஏற்படுமென்று நம்பிக்கொண்டிருக்கும் நேரம் எல்லாம். வெற்றி பெறும் நேரத்கைவிட அதிக மகிழ்ச்சி தருவதாகும். - கோல்டுஸ்மித்
 • சிறு ஆன்மாவுக்குப் பெரிய நம்பிக்கை ஏற்படுவதில்லை. - ஜே. எல். ஜோன்ஸ்[5]
 • முறையாகச் சொல்வதானால், மனிதன் நம்பிக்கையையே ஆதாரமாய்க் கொண்டவன் நம்பிக்கையைத் தவிர அவனுக்கு வேறு உடைமை கிடையாது. அவனுடைய இந்த உலகமே நிச்சயமாக நம்பிக்கைக்கு ஏற்ற இடம் -கார்லைல்[5]
 • ஏழைகளுக்கு நம்பிக்கையைத் தவிர வேறு மருந்தில்லை -ஷேக்ஸ்பியர்[5]
 • உண்மையான நம்பிக்கை வேகமுள்ளது. குருவியைவிட அது வேகமாய்ப் பறக்கும். அரசர்களை அது தேவர்களாக்கும் சாதாரணமானவர்களை அர்சர்களாக்கும். -ஷேக்ஸ்பியர்[5]
 • விழிப்போடிருப்பவர்கள் காணும் கனவுதான் நம்பிக்கை. -பிரைப[5]
 • நமக்கு பிரியமான்வைகளுள் நம்பிக்கையே மிகவும் நன்மை தருவது ஆடிக்கடி அது ஏமாற்றத்தில் முடியாமலிருந்தால், வாழ்வை நீடிக்கச் செய்வது. நன்மை வருமென்று அது ஆவளை அளித்துக்கொண்டேயிருக்கும். - போப் [5]
 • நம்பிக்கை ஒரு மயக்கம்.எந்தக் கையாலும் ஓர் அலையையோ, ஒரு நிழலையோ பற்றிக்கொள்ள முடியாது. -விக்டர் ஹியூகோ [5]
 • நம்மை மனிதராக்குபவை மாபெரும் நம்பிக்கையே. -டென்னிஸ்[5]
 • எல்லா, விஷயங்களிலும் ஏக்கமுறுவதைவிட நம்பிக்கை கொள்வதே நலம். -சதே[5]
 • நம்பிக்கையில்லாத இடத்தில் முயற்சியும் இருக்க முடியாது. - ஜாள்ஸன்[5]
 • நம்பிக்கையைப் பெருக்கக்கூடியது எதுவும தைரியத்தையும் உயர்த்தும். - ஜான்ஸன் [5]
 • நான் நம்பிக்கையால் வாழ்கிறேன். இந்த உலகத்திற்கு வரும் எல்லோரும் அப்படித்தான் என்று நான் எண்ணுகிறேன். - ராபர்ட் பிரிட்ஜில்[5]
 • நம்பிக்கை மனிதன் சாகாவரம் பெற்றவன் என்பதை நிரூபிகின்றது.நமது ஆன்மா அழியக்கூடிய உடலிலிருந்துவிடுதலை பெறப் போராடி, தான் ஊழுழிக்காலம் நிலையானது என்பதை நிரூபித்துக் காட்டுவதே நம்பிக்கையாகும். -ஹென்றி மெல்வின்[5]
 • நம்பிக்கையே வாழ்வு வாழ்வே நம்பிக்கை. -அடிலி ஷீரீட்[5]
 • தொட முடியாத உயரத்தில் உன் கனவுகள் இருந்தாலும், தொட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் நீ போராடு![6]

சான்றுகள்[தொகு]

 1. http://www.aalsa.org/webzine2008/sukhomlinskyenglish.pdf
 2. http://tamilcube.com/res/tamil-quotes.aspx
 3. 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 3.12 3.13 3.14 3.15 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வாழ்க்கைக்கு நம்பிக்கை. நூல் 80- 82. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
 4. நாரா. நாச்சியப்பன் (1993). சிந்தனையாளன் மாக்கியவெல்லி. நூல் 149-162. பிரேமா பிரசுரம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 5. 5.00 5.01 5.02 5.03 5.04 5.05 5.06 5.07 5.08 5.09 5.10 5.11 5.12 5.13 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 227-128. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=நம்பிக்கை&oldid=36779" இலிருந்து மீள்விக்கப்பட்டது