உள்ளடக்கத்துக்குச் செல்

அற்ப விஷயம்

விக்கிமேற்கோள் இலிருந்து

அற்ப விஷயம் என்பது சிறு விசயத்தைக் குறிப்பது.

மேற்கோள்கள்

[தொகு]
 • மிக மெல்லிய உரோமத்திற்கும் நிழலுண்டு. - கதே[1]
 • பெரிய ஆசைகளின் தொந்தரவு இல்லாவிட்டால் பெரும் பாலான மக்கள் சிறு விஷயங்களிலும் வெற்றி பெறுவார்கள். - லாங்ஃபெல்லோ[1]
 • சிறு விஷயங்களைக் கீல்களாகக் கொண்டு பெரும்பயன்கள் சுற்றி வருகின்றன. கடிகாரத்திலுள்ள பெரிய உறுப்புகளிலும். சிறு உறுப்புகளிலும். ஏதாவது ஒன்று சரியாக வேலை செய்யாவிட்டால், கடிகாரமே நின்றுவிடும். - ஆர். ஸ்மித்[1]
 • வாழ்க்கை பெரிய தியாகங்கள் அல்லது கடமைகளால் ஆக்கப்படுவதன்று. ஆனால், சிறு விஷயங்களே அதை அமைக்கின்றன. புன்னகைகள், அன்பு அடிக்கடி செய்யும் சிறு உதவிகள் ஆகியவைகளே வெற்றியடைகின்றன: இதயத்திற்கு ஆறுதலளிக்கின்றன. இன்பமளிக்கின்றன. -ஸர். எச். டேவி[1]
 • மிகச்சிறிய ஐந்துவாகிய மனிதனுக்கு மிகவும் அற்பமானது என்று எதுவுமில்லை. சிறு விஷயங்களை அறிவதனாலேயே நாம் இயன்றவரை நம் துயரத்தைக் குறைத்துக்கொண்டு அதிக அளவு இன்பத்தை அடைகிறோம். -ஜான்ஸன்[1]
 • அற்பம் என்று ஒதுக்கத்தக்கது எதுவுமில்லை - எதுவுமே இல்லை. -காலெரிட்ஜ்[1]
 • அற்பமான பயனற்ற விஷயங்களில், அவைகளுக்கு உரிய நேரத்திற்குக் கூடுதலாகச் செலவழிப்பதைவிட, ஓர் அறிவாளிக்குத் தகுதியில்லாததும். வருத்தப்படத்தக்கதும் வேறு எதுவுமில்லை. -பிளேட்டோ[1]
 • இறைவனுடைய நன்னெறி என்ற உலகில் அற்ப விஷயங்கள் என்பவையே கிடையா. இன்று உண்மையான ஒரு வார்த்தை கூறினால். அது யுகக்கணக்காக ஒலித்துக்கொண்டே இருக்கும். - புன்ஷான் [1]
 • நாம் அற்பமானவை என்று ஒதுக்கித்தள்ளும் செயல்களிலேதான் இன்பத்தின் விதைகள் அமைந்திருப்பதால் அவை வீணாகின்றன. - ஜியார்ஜ் எலியட்[1]
 • 'பெரிய அளவில் நல்ல காரியத்தை உடனே செய்ய வேண்டுமென்று காத்திருப்பவன் ஒரு போதும் எதையும் செய்யப்போவதில்லை. என்று ஜான்ஸன் கூறியிருப்பது உண்மையாகும். வாழ்க்கை சிறுசிறு விஷயங்களைக் கொண்டது. பெருங்காரியத்தை உடனே செய்யும்படியான சந்தர்ப்பம் ஏற்படுவதே அரிது. அற்ப விஷயங்களிலும் பெருந்தன்மையோடு விளங்குவதே உண்மையான பெருமை. - வி. ஸிம்மன்ஸ்[1]
 • நீரோ மன்னனைப் போலக் குதிரைகளுக்குத் தங்கத்தினாலான லாடங்கள் கட்டுதல் பெரிய அறிவீனமாவது போன்றது. அற்ப விஷயங்களில் நேரத்தைக் கழிப்பதும். ஜே. மேஸன்[1]
 • பெரும் தகுதியால் உன்னைப் பிறர் மதிப்பார்கள். பெரும் குறைபாடுகளால் உன்னை வெறுப்பார்கள். ஆனால், அற்ப விஷயங்கள். சொற்ப உபகாரங்கள். ஒன்றுமில்லை என்று சொல்லத்தக்க சாதாரண விஷயங்களைக்கொண்டே உலக வாழ்க்கையில் மக்கள் உன்னை விரும்புகிறார்கள். அல்லது வெறுக்கிறார்கள். - செஸ்டர்ஃபீல்டு[1]
 • மனிதர்கள் அற்ப விஷயங்களாலேயே இழுத்துச் செல்லப்படுகின்றனர். - நெப்போலியன்[1]
 • ஆயிரம் காடுகளை உண்டாக்கும் ஆற்றல் ஒரு விதையில் அடங்கியிருக்கின்றது. - எமர்ஸன்[1]

பழமொழிகள்

[தொகு]
 • இப்பொழுது சிறு விஷயங்களைச் செய் நாளடைவில் பெரிய விஷயங்கள் உன்னை நாடி வந்து. தம்மை நிறைவேற்றி வைக்கும்படி கேட்கும். - பாரசீகப் பழமொழி[1]

மேற்கோள்கள்

[தொகு]
 1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 75-77. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=அற்ப_விஷயம்&oldid=19681" இலிருந்து மீள்விக்கப்பட்டது