உள்ளடக்கத்துக்குச் செல்

பிரெடிரிக் சில்லர்

விக்கிமேற்கோள் இலிருந்து
கேத்தெவும் ஷில்லரும் (வலது) இணைந்த நினைவுச்சின்னம், வைமார்.

யோகன் கிறிசுடோப் பிரெடிரிக் பொன் சில்லர் ( 10 நவம்பர் 1759 -9 மே 1805) செருமானிய கவிஞரும் மெய்யியலாளரும் வரலாற்றாளரும் நாடகாசிரியரும் ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • அமைதியாயுள்ளவர்களுக்கு அமைதி மறுக்கப்படுவதில்லை-[1]
  • அறிவாற்றல் என்பது மூளையின் ஆற்றல்.[2]
  • நீ எண்ணுவது எல்லோருக்கும் சொந்தம், நீ உணர்வதே உனக்குச் சொந்தம்.[3]
  • லெளகீக வாழ்வினின்று விடுதலை பெற இரண்டு வழிகள் உள. ஒன்று இலட்சிய வாழ்விலும், மற்றொன்று மரணத்திலும் சேர்க்கும்.[4]
  • ஆசிரியன் எதை எழுதாமல் விடுக்கின்றானோ அதைக்கொண்டே அவன் திறமையை நிர்ணயிக்க முடியும்.[5]
  • எதிரிப்பு ஊக்கமுள்ளவரை வெறி கொள்ளச் செய்யும் அவரை வேறு வழியில் திருப்புவதில்லை.[6]
  • நடையில் வல்ல கலைஞனை அவன் கூறாமல் விடுகிற விஷயங்களிலிருந்தே நான் கண்டு கொள்கிறேன்.[7]
  • கண்ணின் ஒளி கடவுளின் உன்னதப் பரிசு எல்லா உயிர்களும் ஒளியிலிருந்து வாழ்கின்றன. படைக்கப்பெற்ற அழகிய பொருள் ஒவ்வொன்றும், செடிகளும். எல்லாம் உவகையோடு ஒளியின் பக்கம் திரும்புகின்றன.[8]
  • பொதுமக்களின் நம்பிக்கை அதற்கு ஆதாரமில்லாத போதிலும், உண்மையைப் போன்றே பயனுண்டாக்கிவிடும் சந்தர்ப்பங்களும் உண்டு. [9]
  • கேலி செய்வதில், செய்தவனே முதலில் சிரிக்கும்படி ஏற்பட்டால், அதன் முக்கியம் போய்விடும்.[10]
  • தன் கௌரவத்திற்காக மகிழ்ச்சியோடு துணிந்து முன்வராத நாடு கழிவானது. [11]
  • வாக்குகளை நிறுத்துப் பார்க்க வேண்டும். எண்ணக்கூடாது.[12]
  • தத்துவ சாஸ்திரிகள் உலக விவகாரங்களைப் பற்றித் தர்க்கித்துக்கொண்டிருப்பர். ஆனால் அதற்கிடையில் உலகை நடத்திச் செல்வன பசியும் காதலுமேயாம்.[13]
  • த மேகங்களையே பார்த்துக்கொண்டு நாம் கட்டடத்தை மேலும் மேலும் உயரமாய்க் கட்டிக்கொண்டே போகிறோம். கீழேயுள்ள மாபெரும் தூண்கள் போதிய அடிப்பை யில்லாமல் ஆடிக்கொண்டிருப்பதைப்பற்றி நாம் சிந்திப்பதேயில்லை.[14]
  • காலம் புனிதமாக்குகின்றது. நெடுங்காலத்திற்கு முந்திய விஷயம் சமயமாகிவிடுகின்றது.[15]
  • இந்த வாழ்க்கையில் அடையும் பேறுகளுள் புகழே முதன்மையானது உடல் மண்ணுக்குள் போன பின்பு பெருமையுள்ள பெயர் மட்டும் உயிருடன் வாழ்ந்து வருகின்றது.[16]
  • மிகவும் அதிகக் கவனமாயிருப்பவன் செய்து முடிப்பது கொஞ்சமாய்த்தானிருக்கும்.[17]

குறிப்புகள்

[தொகு]
  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 39-40. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  2. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 67-68. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  3. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அறிவு. நூல் 52- 61. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  4. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/இலட்சியம். நூல் 46- 50. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  5. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/உரைநடை. நூல் 176-178. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  6. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 134-135. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  7. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 136-137. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  8. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 142. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  9. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 178-179. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  10. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 164-165. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  11. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 170. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  12. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 184. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  13. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/தத்துவ ஞானம். நூல் 42- 44. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  14. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 83-84. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  15. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 262-263. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  16. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 271-273. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  17. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 304. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பிரெடிரிக்_சில்லர்&oldid=35668" இலிருந்து மீள்விக்கப்பட்டது