ஜான் லாக்

விக்கிமேற்கோள் இலிருந்து
ஜான் லாக் (1697)

ஜான் லாக் (John Locke, ஆகஸ்ட் 29, 1632 – அக்டோபர் 28, 1704) ஒரு இங்கிலாந்துத் மெய்யியலாளர்.

மேற்கோள்கள்[தொகு]

அறிவுடைமை[தொகு]

  • அறிவின் ஒவ்வொரு துறையிலும் ஆர்வம் கொள்வது மனம் வளர்ச்சியடைவதற்கு அவசியமாகும். அதன் மூலமே மிக உயர்ந்த அளவுக்குத் தெளிவு பெறமுடியும். [1]

அற்புதங்கள்[தொகு]

  • அற்புதம் எதுவும் அதைப் பார்க்கிறவருக்குப் புரியாததாலும், இயற்கையான முறைக்கு மாறாக இருப்பதாலும். அது தெய்விகமானது என்று கருதப்பெறுகின்றது.[2]

உண்மை[தொகு]

  • சுருதிக்காக அறிவை அகற்றுபவன் இரண்டின் ஒளியையும் அவிப்பவனாவான். அவன் செயல், க்ண்ணுக்கு எட்டா நட்சத்திரத்தைத் தூர திருஷ்டிபக் கண்ணாடி வழியாய்த் தெளிவாய்ப் பார்ப்பதற்கு என்று கண்களை அவித்துக் கொண்டது போலாகும்.[3]

உரையாடல்[தொகு]

  • ஒருவர் பேசிக்கொண்டிருக்கும் பொழுது குறுக்கிட்டுப் பேகதலைவிட முரட்டுத்தனம் வேறில்லை.[4]

உலகம்[தொகு]

  • உலகில் நமக்குரிய ஒரே வேலி அதை நன்றாகத் தெரிந்து கொள்ளல். [5]

படித்தல்[தொகு]

  • படிப்பானது அறிவு தரவேண்டிய விஷயங்களையே தரும். படித்தவற்றைச் சிந்தித்தலே படித்தவற்றை நமக்குச் சொந்தமாகச் செய்யும்.[6]

மடமை[தொகு]

  • சரியான தத்துவங்களிலிருந்து தவறான முடிவுகளைப் பெறுவது மடமை. பைத்தியம் என்பது தவறான தத்துவங்களிலிருந்து சரியான முடிவுகளைப் பெறுவது: இரண்டுக்குமுள்ள வேற்றுமை இதுதான்.[7]

குறிப்புகள்[தொகு]

  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 69-75. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  2. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 78-79. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  3. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வாய்மை. நூல் 23- 29. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  4. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 126-127. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  5. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 127-128. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  6. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/படித்தல். நூல் 168-171. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  7. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 295. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஜான்_லாக்&oldid=37950" இலிருந்து மீள்விக்கப்பட்டது