மன நிறைவு

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
எட்கர் ஃபாரஸ்ஜின் (Edgard Farasijn) வரைந்த "மனித திருப்திகள்" (Human Contentments), இருபதாம் நூற்றாண்டு,

நிறைவு, மன நிறைவு, திருப்தி அல்லது ஆத்மதிருப்தி என்பது தாம் நினைத்த காரியம் சரிவர செய்தாலோ, இயற்கையாகவே நிகழ்வுகள் எதிர்நோக்கியபடி அமைந்தாலோ உண்டாகும் உணர்ச்சியாகும். இதற்கு மேல் எதுவும் தேவையில்லா நிலையினையும் திருப்தி எனக்கூறலாம்.

மேற்கோள்கள்[தொகு]

 • ரோஜாச் செடியில் முள் இருப்பதற்கு வருந்தாதே. முட்செடியில் மலர் இருப்பதற்கு மகிழ்வாய். -ஆவ்பரி[1]
 • மனம் கொண்டது மாளிகை; நரகத்தைச் சொர்க்க மாக்குவதும் சொர்க்கத்தை நரகமாக்குவதும் அதுவே. -மில்டன்[1]
 • விருப்பத்திற்குக் குறைவாய்ப் பெறுபவன் தகுதிக்கு அதிகமாய்ப் பெறுவதாக அறியக் கடவன். -ஷோபனார்[1]
 • உயர்ந்த சிலரோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதினும் தாழ்ந்த பலரோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதே நலம். -ஜாண்ஸன்[1]
 • வருந்துவோர் அருகிருப்பது மகிழ்வோருக்குப் பாரமாகவே யிருக்கும். ஆனால் மகிழ்வோர் அருகிருப்பது வருந்துவோர்க்கு அதனிலும் அதிகப் பாரமாக இருக்கும். -கதே[1]
 • பெற்றது சிறிதேனும் திருப்தியுற முடியாதவன் முடிவிலாத் தண்டனை அனுபவிப்பவனாவான். -காரிக்[1]
 • அதிர்ஷ்டம் அதிகமாக அளிக்கக் கூடும், ஆயினும் அதிகத்தைப் போதுமானதாக்குவது மனமே. -பாயில்[1]
 • விரும்புவதைப் பெற முடியாதாகையால் பெற முடிவதை விரும்புவோமாக. -ஸ்பானிஷ் பழமொழி[1]
 • ஈயே! போ, உனக்கேன் துன்பம் இழைக்க வேண்டும்? இருவர்க்கும் உலகில் இடம் உளதே. -ஸ்டோன்[1]
 • திருப்தியுள்ள பன்றியாயிருப்பதினும் திருப்தியில்லா மனிதனாயிருப்பதே நலம். திருப்தியுள்ள மூடனாயிருப்பதினும் திருப்தியில்லா ஞானியாயிருப்பதே நலம். பன்றியும் மூடனும் வேறாக நினைத்தால் அதற்குக் காரணம் அவர்களுக்குத் தங்கள் கட்சி மட்டுமே தெரியும்; இரண்டு கட்சியையும் பிறரே அறிவர். -மில்[1]
 • அனுபவித்துத் தீரவேண்டியதற்கு எதிராக வாதமிட்டுப் பயனில்லை. வாடைக் காற்றுக்கு ஏற்ற வாதம் இறுகப் போர்த்திக் கொள்வது ஒன்றே. -லவல்[1]
 • திருப்தியுள்ள மனமே தீராத விருந்து. -ஆங்கிலப் பழமொழி[1]
 • எதிர் பார்ப்பவன் ஏமாந்து போகலாம், அதனால் எதிர் பாராதவனே பாக்கியசாலி. -போப்[1]
 • வறுமையேயாயினும் மனத்தில் திருப்தி உண்டேல் அதுவும் போதிய செல்வம் உடைமையே ஆகும். ஷேக்ஸ்பியர்[1]
 • ஒன்றுமில்லாமை எப்பொழுதும் சுகம், சில சமயங்களில் சந்தோஷமும் கூட வறுமையுற்றாலும் திருப்தியுள்ளவனே பொறாமைப்படத் தகுந்தவன். -பிஷப் ஹால்[1]
 • அதிர்ஷ்டம் தராததை யெல்லாம் திருப்தியிடமிருந்து பெறுவோமாக. -கோல்ட்ஸ்மித்[1]
 • குதுகலமும் திருப்தியும் சிறந்த அழகுண்டாக்கும் மருந்துகள். இளமைத் தோற்றத்தைப் பாதுகாப்பதில் கீர்த்தி பெற்றவை. -டிக்கன்ஸ்[1]

குறிப்புகள்[தொகு]

 1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/திருப்தி. நூல் 143-146. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=மன_நிறைவு&oldid=16801" இருந்து மீள்விக்கப்பட்டது