உள்ளடக்கத்துக்குச் செல்

அலெக்சான்டர் போப்

விக்கிமேற்கோள் இலிருந்து

அலெக்சான்டர் போப் ( (21 May 1688 – 30 May 1744) பதிணெட்டாம் நூற்றாண்டின் தலை சிறந்த ஆங்கிலக் கவிஞர்களுள் ஒருவர் ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • இனிமைகள் கண்ணைக் கவரும், திறமையோ ஆன்மாவை ஈர்க்கும்.
  • வாழ்க்கையின் வறுமையிலே துன்பப்படுவோர்களுக்காக இரங்குக! இன்புறுவோர் துன்புறும் மக்களுக்குக் காட்டும் இரக்கம் மட்டுமல்ல அது; கடன், கடமை, மனிதநேயம்.[1]
  • பிறர் நலம் கண்டு மகிழமாட்டார்கள் யார்? பிறர் துன்பங்களைக் கண்டு மனம் வருந்தி இரங்கமாட்டார்கள்! யார்? அவர்கள்தான் அன்பிலார்! அவர்கள் எல்லாரும் இறந்து படுக.[1]
  • தீயவன் ஒருநாளும் மெய்யறிவு பெற்றதில்லை. ஆம், ஒருநாளும் மெய்யறிவு பெற்றதில்லை. இது முக்காலும் உண்மை.[2]
  • தேவர்கள் செல்ல அஞ்சும் இடத்திற்கு மூடர்கள் பாய்ந்து விடுவர்.[3]
  • கர்வம்-அதுதான் முட்டாள்களை விட்டு ஒரு பொழுதும் நீங்காத துர்க்குணம்.[4]
  • கடவுள் சிருஷ்டிகளின் தலைசிறந்தது சத்திய வந்தனே,[5]
  • சமயவெறி கொண்டார். கொள்கை முறைகள் குறித்துச் சண்டையிடட்டும். வாழ்வைச் சரியாக நடத்தினால் கொள்கை தவறாய்விட முடியாது.[6]
  • அறிவில்லாத சமயவாதிகள் சமயக் கொள்கைகளுக்காகச் சண்டையிடட்டும். ஆனால் தர்ம வழியில் நடப்பவன் ஒருநாளும் தவறியவனாகான்.[7]
  • எதிர் பார்ப்பவன் ஏமாந்து போகலாம், அதனால் எதிர் பாராதவனே பாக்கியசாலி.[8]
  • தகுதியில்லாப் புகழுரை மாறுவேஷம் பூண்ட பழியேயாகும்.[9]
  • செல்வச் செழிப்புடனுள்ள ஒரு மனிதனை நேசிப்பதிலுள்ள பெருமையே அழகுள்ள ஒரு பெண்ணிடம் அன்பு கொள்வதிலும் இருக்கின்றது. இரண்டும் மாறக்கூடியவை.[11]
  • இயற்கை அறிவுக்கு மேலாகப் பகுத்தறிவை எவ்வளவு வேண்டுமானாலும் உயர்த்திக்கொள்ளுங்கள்; முதலாவதில் கடவுள் வழிகாட்டுகிறார்; இரண்டாவதில் மனிதன் வழி காட்டுகிறான்.[12]
  • கட்சி என்பது சிலருடைய நன்மைக்காகப் பலருக்குப் பைத்தியம் பிடிப்பதாகும். [13]
  • எந்த ஆராய்ச்சியிலும் நாம் சிறிது ஊன்றிக் கருத்தைச் செலுத்தினால், அது நமக்கு இன்பமளிக்காமல் இராது.[14]
  • ஒரு பொய்யைச் சொல்பவன் எவ்வளவு பெரிய வேலையை மேற்கொள்கிறான் என்பதை உணர்வதில்லை; அந்தப் பொய்யை நிலை நாட்டுவதற்கு அவன் மேலும் இருபது பொய்களை உண்டாக்க வேண்டும்.[15]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 6- 12. 
  2. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அறிவு. நூல் 52- 61. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  3. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அறிவீனம். நூல் 61- 63. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  4. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கர்வம். நூல் 112- 113. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  5. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வாய்மை. நூல் 23- 29. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  6. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கொள்கை நம்பிக்கை. நூல் 78- 80. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  7. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/மதம். நூல் 38-42. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  8. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/திருப்தி. நூல் 143-146. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  9. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/முகஸ்துதி. நூல் 92- 95. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  10. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல். நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  11. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 58-61. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  12. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 131. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  13. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 148. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  14. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 153. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  15. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 287-289. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.

வெளி இணைப்புக்கள்

[தொகு]
Commons
Commons
விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:
"https://ta.wikiquote.org/w/index.php?title=அலெக்சான்டர்_போப்&oldid=35266" இலிருந்து மீள்விக்கப்பட்டது