உள்ளடக்கத்துக்குச் செல்

எட்வர்ட் யங்

விக்கிமேற்கோள் இலிருந்து

எட்வர்ட் யங் (Edward Young, 3, சூலை 1683 - 5, ஏப்ரல் 1765) என்பவர் ஒரு ஆங்கில கவிஞர், விமர்சகர், மெய்யியலாளர் மற்றும் இறையியலாளர் ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • மாந்தர் மூடராக வாழலாம், ஆனால் மூடராக இறக்க முடியாது.[1]
  • பணிவுள்ள அன்புதான் சுவர்க்க வாயிலைக் காத்து நிற்கின்றது: செருக்குள்ள விஞ்ஞான அறிவன்று.[2]
  • ஆடம்பரத்தின் மென்மையான மெத்தையின்மீதுதான் பெரும்பாலான இராஜ்யங்கள் மாய்ந்தொழிந்தன.[3]
  • தங்கத்தின் சுமையைத் தாங்க முடியாமல் முனகுபவன் ரொட்டிக்காக அழுகிறான்.[4]
  • இறைவனுக்குப் பகைவனானவன் ஒருகாலும் மனிதனுக்கு நண்பனாக இருந்ததில்லை.[5]
  • வாழக் கற்பிப்பவன் மரிக்கவும் கற்பிக்கக் கடவன்.[6]
  • வயது முதிர்ந்து நடக்க வேண்டியதைச் செய்து முடிக்கும்படி. நமது உலகத்தில், மரணம் மது வெறியை அனுப்பியிருக்கின்றது.[7]
  • சரியான நம்பிக்கை இகத்திலிருந்து பரத்துக்குப் பாலம் அமைக்கும்.[8]
  • செல்வம் இன்பம் தராது; சீதேவி அருள அருளச் சிந்தை அதிகமாக ஆசைப் பட்டுக்கொண்டே இருக்கும்.[9]
  • அதிகமாய்ப் படித்திருந்தால், அநித்தியமான மனிதர்கள் எவ்வளவு அற்ப அறிவு பெற்றிருக்கிறார்கள் என்பது தெரியும். அதிகச் செல்வமிருந்தால், உலகப் பற்றுடைய மக்கள் எவ்வளவுதான் அனுபவிக்க முடியும் என்பது தெரியும்.[10]
  • பகல் முழுவதும் வீணாக அலைந்து திரிந்தபின், உறக்கம் மறுநாள் காலைக்காக நம்மை ஓய்வெடுக்கச் செய்கின்றது.[11]
  • எவ்வளவுதான் மறைத்து வைத்தாலும் எல்லோருடைய நெஞ்சிலும் புகழ் ஆசை எப்பொழுதும் ஆட்சிசெய்து கொண்டேதான் இருக்கிறது.[12]
  • மனிதனுடைய தேவைகள் சுருக்கம். அவையும் அதிக நாள் தேவையில்லை. இயற்கை அவனுக்கு ஒரு மணி நேரம் அளித்துள்ள உடலைக்கூட அவன் மண்ணிலே சேர்த்துவிட வேண்டியிருக்கின்றது.[13]
  • மரணம் வாழ்வின் சிகரம்: மரணம் இல்லையென்றால், வாழ்வது வாழ்வாகாது. மூடர்கள்கூடச் சாகவே விரும்புவர்.[13]
  • முன்பு உயிரோடில்லாதிருந்த மண் எங்கேயிருக்கின்றது? மண் வெட்டியும் கலப்பையும் மண்ணிலுள்ள நம் முன்னோர்களையே கிளப்புகின்றன. மனிதர்களின் பூநதுகளிலிருந்தே நாம் அன்றாட உணவைப் பெறுகிறோம்.[14]
  • தெளிவான சாதாரணப் பொது அறிவே வாழ்க்கையில் செல்லுபடியாகும் நாணயமாகும்.[15]

குறிப்புகள்

[தொகு]
  1. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அறிவீனம். நூல் 61- 63. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 78-81. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  3. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 86-87. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  4. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 128. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  5. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 112-114. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  6. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/கல்வி. நூல் 150-157. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  7. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 317. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  8. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கொள்கை நம்பிக்கை. நூல் 78- 80. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  9. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/செல்வம். நூல் 99- 106. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  10. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 194-197. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  11. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 132. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  12. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/முகஸ்துதி. நூல் 92- 95. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  13. 13.0 13.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 24-25. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  14. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 278. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  15. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 286-287. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=எட்வர்ட்_யங்&oldid=36242" இலிருந்து மீள்விக்கப்பட்டது