உள்ளடக்கத்துக்குச் செல்

பிரான்சிஸ் பேக்கன்

விக்கிமேற்கோள் இலிருந்து
பிரான்சிஸ் பேக்கன்

பிரான்சிஸ் பேக்கன் (Francis Bacon, 22 ஜனவரி 1561 – 9 ஏப்ரல் 1626) ஆங்கில மெய்யிலாளர். பல ஆண்டுகள் முன்னணி அரசியல் தலைவராக விளங்கிய அறிவியலாளர், வழக்கறிஞர், சட்ட நிபுணர், ஆசிரியர் மற்றும் அறிவியல் முறை முன்னோடி ஆவார். அறிவியலும் தொழில் நுட்பமும் இந்த உலகை அடியோடு மாற்றிவிடும் என்பதை உணர்ந்த முதலாவது தத்துவ ஞானி. அறிவியல் ஆராய்ச்சிகளை தீவிரமாக ஆதரித்த முதல் தத்துவஞானியும் ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • அதிர்ஷ்டத்தை வார்க்கும் அச்சு அவனவன் கையிலேயே இருந்துகொண்டிருக்கிறது.[1]
  • அதிர்ஷ்டம் ஒரு சந்தையை ஒக்கும். அங்கே பலசமயங்களில் சிறிதுநேரம் காத்திருந்தால் விலைகள் இறங்குவதுண்டு. [1]
  • அரசர்க்கு வேண்டிய நீதிகள் எல்லாம் இவைகளில் அடங்கி யுள்ளன. நீ ஒரு மனிதன் என்பதை நினைவில் வைத்துக்கொள்: நீ ஆண்டவனின் பிரதிநிதி என்பதையும் நினைவில் வைத்திரு.[2]
  • அழகின் சிறந்த பகுதி என்பது எந்தச் சித்திரமும் வெளிப்படுத்த முடியாத ஒன்று.[3]
  • அறம் தன்னில் தானே அடையும் வெகுமதியை விட அதிகமான வெகுமதியை வெளியில் பெற முடியாது. அதுபோல் மறமும் தன்னில் தானே அடையும் தண்டனையைவிட அதிகமான தண்டனையை வெளியில் பெற முடியாது.[4]
  • நாம் மரிக்கும்வரை நமது அறிவாற்றலைப் பயன்படுத்திக் கொள்வதில் ஆண்டவர் வரையறை எதுவும் விதிக்கவில்லை.[5]
  • அறிவுடைமையால் வரும் இன்பமும் மகிழ்ச்சியும் இயற்கையில் கிடைக்கும் மற்றவைகளைவிட மிகவும் மேலானவை. மற்ற இன்பங்களிளெல்லாம் தெவிட்டுதல் உண்டு. இதில் தெவிட்டுதலே இல்லை, மற்றவைகளில் புதுமைதான் இன்பமளித்ததே தவிர அவைகளின் தன்மை அன்று. தெவிட்டுதலால், காம விகாரமுற்றவர்கள் துறவிகளா வதையும். பேராசையுள்ள அரசர்கள் வெறுப்புற்று வருந்துவதையும் நாம் காண்கிறோம். ஆனால், அறிவுடைமையில் தெவிட்டுதலில்லை. அதைப்ப்ற்றிய திருப்தியும் ஆவலும் எளிதில் மாறிமாறி ஏற்படுகின்றன.[6]
  • அன்பு ஆன்மாவின் பெருந்தன்மை. அந்த பெருந்தன்மையை நாம் என்னென்ன வேளைகளில் எத்தனை முறை எதிரொலிக்கின்றோம் என்ற அளவைப் பொறுத்து உணர்ச்சியின் பெருக்கம் தான் அன்பு.[7]
  • நல்ல ஆலோசனைமட்டும் சொல்பவன் ஒரு கையால் கட்டடம் கட்டுகிறான். நல்ல ஆலோசனையுடன் தன் நடத்தையையும் மாதிரியாகக் காட்டுபவன் இரு கைகளால் கட்டுகிறான் நல்ல முறையில் கண்டித்துவிட்டுத் தனது தவறான நடத்தையைக் காட்டுபவன் ஒரு கையால் கட்டியதை மறு கையால் உடைப்பவனாவான்.[8]
  • தத்துவ ஞானம் சிறிதே பெற்றால் நிரீச்வரவாதியாக்கும்; ஆழ்ந்ததாகப்பெற்றால் ஈச்வரவாதியாக்கும்.[9]
  • கடவுள் தன்னை நிரூபிக்க ஒருநாளும் அற்புதங்கள் காட்டுவதில்லை. அவருடைய சாதாரண சிருஷ்டிகளே போதும்.[9]
  • நாத்திகம், வாழ்க்கையைக்காட்டிலும் இதயத்திலேயே உள்ளது.[10]
  • சொற்பமான தத்துவஞானம் மனிதர்களின் மனங்களை நாத்திகத்தின்பால் செலுத்தும் ஆனால், ஆழ்ந்த ஞானம் அம் மனங்களைச் சமயத்தின்பால் செலுத்தும். -பேக்கன்[10]
  • இயற்கைக்குக் கீழ்ப்படிவதன் மூலம் அவளை ஆட்சி செய்ய முடியும்.[11]
  • குடும்பத்தின் இலக்கியத்தைக் கட்டுப்படுத்த எனக்கு அதிகாரமிருந்தால், நான் இராஜ்யத்தின் நன்மையையும் சமயத்தில் நன்மையையும் பாதுகாக்க முடியும்.[12]
  • வீடுகள் வசிப்பதற்காகக் கட்டப்படுகின்றன. பார்வைக்காக மட்டுமன்று. ஆதலால், அவை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதைவிட பயனையே அதிகம் கவனிக்க வேண்டும் இரண்டும் சேர்ந்து அமைவதானால் நல்லதுதான்.[13]
  • தீயோன் ஒருவன் துறந்த ஞானி போல நடிக்கும் பொழுது மேலும் மோசமாகிறான்.[14]
  • குடிவெறியைப் போல், எல்லாப் படைகளும் சேர்ந்து மனித சங்கத்தினருள் அத்தனை பேர்களை அழித்ததில்லை; அத்தனை சொத்துகளைப் பாழாக்கியதில்லை.[15]
  • நமக்குள்ளே இயங்கும் தெய்வத்தன்மை இல்லாவிட்டால், மனித சமூகத்திற்கு என்ன மதிப்பு இருக்கும்?[16]
  • ஒரு மனிதனுடைய சாதாரணச் செலவுகள் அவனுடைய வருவாயில் பாதியளவு மட்டும் இருக்க வேண்டும். அவன் செல்வனாக விளங்க வேண்டுமானால், மூன்றில் ஒரு பகுதியே செலவழிக்க வேண்டும்.[17]
  • வில்லை அதிகமாக வளைத்தால் ஒடிந்துவிடும்; மனத்தை வளைக்காமலே விட்டிருந்தால் அதுவும் ஒடிந்துவிடும்.[18]
  • தத்துவ ஞானத்தை மேலெழுந்தால் போலக் கற்றால், அது ஐயங்களை எழுப்பும் தீர்க்கமாக ஆராய்ந்தால் ஐயங்களை நீக்கும்.[19]
  • சில நூல்களைச் சுவைத்தால் போதும், சில நூல்கள் விழுங்கவும் வேண்டும். ஆனால், வெகு சில நூல்களே மென்று ஜீரணிக்கத் தகுந்தவை.[20]
  • தக்க சமயத்தைத் தேடிக்கொள்வது நேரத்தைக் காத்துக் கொள்வதாகும்.[21]
  • படித்தல் விஷயங்கள் நிறைந்த மனிதனாகச் செய்யும். சம்பாஷித்தல் எந்தச் சமயத்திலும் பேசத்தக்க மனிதனாகச் செய்யும். எழுதுதல் எதிலும் திட்டமான கருத்துக்கள் உள்ள மனிதனாகச் செய்யும்.[22]
  • படிப்பின் நோக்கம் ஆட்சேபம் செய்தலும், ஆராயாது நம்பிக்கை கொள்ளுதலும், வாதம் செய்தலும் அல்ல. ஆய்ந்து சீர்துக்கித் தீர்மானித்தலே.[22]
  • படிப்பு இன்பமாகும். அணியாகும். திறமையாகும்.[23]
  • பணம் உரத்தைப் போன்றது. அதை நன்றாகச் சிதறுவதைத் தவிர அதனால் வேறு பயனில்லை.[24]
  • பழிவாங்குவதில் கருத்துள்ளவன் பிறர் தந்த புண்ணை ஆறவிடுவதில்லை.[25]
  • புகழ் நெருப்பைப் போன்றது. அதை மூட்டிவிட்டால் பிறகு காப்பது எளிது. ஆனால், அதை மூட்டுவது கடினம்.[26]
  • மனிதனுடைய மனம் அன்பில் இயங்குமானால், உண்மையில் சுழலுமானால், கடவுளிடம் ஓய்வு காணுமானால், அப்பொழுது சுவர்க்கத்தை இப்பூமியிலேயே கண்டு விடலாம்.[27]
  • புனிதமான விஷயங்களை உணர்ச்சியின்றிக் கையாளும் வேஷதாரிகளே பெரிய நாஸ்திகர். அவர்களுக்கு இறுதியில் சூடு போடுதல் அவசியம்.[28]

குறிப்புகள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  1. 1.0 1.1 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அதிர்ஷ்டம். நூல் 109- 110. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 41-42. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  3. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 58-61. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  4. என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 13- 21. 
  5. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 67-68. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  6. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 69-75. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  7. என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 6 - 12. 
  8. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 91-92. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  9. 9.0 9.1 பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/நிரீச்வர வாதம். நூல் 37. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  10. 10.0 10.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 236-237. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  11. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 102-103. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  12. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 105-106. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  13. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 149-150. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  14. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 151-152. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  15. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 317. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  16. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 300. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  17. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 180-181. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  18. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 202. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  19. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 204-205. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  20. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/நூல்கள். நூல் 163-168. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  21. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 245-246. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  22. 22.0 22.1 பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/படித்தல். நூல் 168-171. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  23. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 251-252. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  24. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 252-253. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  25. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/பழிவாங்குதல். நூல் 75- 76. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  26. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 271-273. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  27. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/மோட்சம். நூல் 36- 37. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  28. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/மதம். நூல் 38-42. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பிரான்சிஸ்_பேக்கன்&oldid=36243" இலிருந்து மீள்விக்கப்பட்டது