ஆலிவர் கோல்ட்ஸ்மித்
Appearance
ஆலிவர் கோல்ட்ஸ்மித் (10 நவம்பர் 1728 - 4 ஏப்ரல் 1774) ஒரு ஐரிஷ் புதின எழுத்தாளர், நாடக ஆசிரியர், கவிஞர் ஆவார்.
மேற்கோள்கள்
[தொகு]== அச்சம்
- நன்றியைக்காட்டிலும் கடமையைச் செய்ய அச்சமே தூண்டுகின்றது. ஒழுக்கத்தை விரும்பியோ, எல்லாப் பொருள்களையும் அளித்துள்ள இறைவனுக்கு நன்றி செலுத்தவோ நேர்மையாக நடப்பவன் ஒருவன் என்றால், தண்டனைக்கு அஞ்சி நேர்மையாக நடப்பவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள்.[1]
- அற்ப மனிதர்களுக்கு அற்ப விஷயங்கள் பெரிதானவை.[2]
- ஒரு பையன் தனியாக ஐந்து ஆண்டுகள் படிப்பதைவிட பொதுப் பள்ளியில் ஓர் ஆண்டிலேயே அதிகமாக அறிவைப் பெற்றுவிடுவான். இளைஞர். உலகியல் அறிவை ஆசிரியர்களிடமிருந்து பெறுவதைக்காட்டிலும் தமக்குச் சமமாயுள்ள இளைஞர்களிடமிருந்து அதிகமாய்க் கற்கின்றனர்.[3]
- சில தோஷங்கள் குணங்களுடன் உறவுகொண்டவை; அதனால் மறத்தைக் களையும் பொழுது அறத்தையும் அழிக்க நேரிட்டு விடலாம்.[4]
- ஆங்கிலேயரின் சட்டங்கள் குற்றத்தைத் தண்டிக்கின்றன: சீனர்களின் சட்டங்கள் இன்னும் அதிகமாய்ச் செய்தின்றன, அவை நன்மையைப் பாராட்டிப் பரிசளிக்கின்றன. [5]
- சட்டங்கள் ஏழைகளைக் கசக்கிப் பிழிகின்றன. பணக்காரர்களோ சட்டத்தை ஆட்சி செய்கின்றனர்.[5]
- தேனீயைப் போல, நமது வேலையை நாம் இன்பமயமாக்கிக கொள்வோம்.[7]
- மண்ணுலகில் மனிதருக்கு வேண்டுவது வெகு சொற்பம். அதுவும் சின்னாட்களுக்கே.[8]
- தடுக்கி விழாமலே இருப்பதில் நமக்குத் தலைசிறந்த பெருமையில்லை. ஆனால், நாம் விழுந்த பொழுதெல்லாம் மீண்டும் எழுதலில் இருக்கின்றது. [9]
- பலவிதமான சட்டங்களை இயற்றி நீதியைக் கட்டுபபடுத்துவதும், நீதிபதிகளையே அதிகம் நம்பி விட்டுவிடுவதும். ஒன்றுக் கொன்று எதிர்ப்பக்கங்களிலுள்ள இரண்டு பாறைகள்: இந்தப் பாறைகளின்மீதே சட்டங்களியற்றுவோரின் அறிவு மோதி உடைந்துவிடுகின்றது. முதல் விஷயத்தில், போர்வைகளால் மூச்சுத் திணறி இறந்து போன சக்கரவர்த்தியை உதாரணமாய்க் கூறலாம்; குளிரைக் காப்பதற்காகவே அவருக்குப் போர்வைகள் போடப்பெற்றிருந்தன; மற்ற விஷயத்தில், எதிரிகளிடம் தன் கோட்டைகளை விட்டுவிட்ட நகரத்தை உதாரணமாகக் கூறலாம். அந்நகர மக்கள் தாங்கள் தைரியத்தை மட்டுமே நம்பியிருப்பதாகக் காட்டிக்கொள்ளவே அப்படிச் செய்தார்களாம்.[10]
- எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களுடைய மகன் புதுமைக் கதையான ஒரு நாவலைத் தீண்டிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.[11]
- அதிர்ஷ்டம் தராததை யெல்லாம் திருப்தியிடமிருந்து பெறுவோமாக.[12]
குறிப்புகள்
[தொகு]- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 11-12. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 75-77. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 153. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/குற்றம் காணல். நூல் 71- 73. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ 5.0 5.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 171-173. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சிரிப்பு. நூல் 96- 98. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 188-189. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/செல்வம். நூல் 99- 106. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 191. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 239-241. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 230-231. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/திருப்தி. நூல் 143-146. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.