உள்ளடக்கத்துக்குச் செல்

செனீக்கா

விக்கிமேற்கோள் இலிருந்து
செனிக்காவின் சிலை

செனீக்கா (Seneca the Younger) (கி.மு. 4 – கி.பி 65) என்பவர் உரோமானிய உறுதிப்பாட்டுவாத மெய்யியலாளர். அரசியலாளர் நாடக ஆசிரியர் ஆவார்.

இவரது மேற்கோள்கள்

[தொகு]
  • பலாத்காரத்தின் துணைகொண்டு வகித்துவரும் அதிகாரம் நீடித்து நிற்பது அரிது. ஆனால் அமைதியும் நிதானமும் எல்லா விஷயங்களையும் நீடித்து நிற்கச் செய்பவை.[1]
  • பிறர்க்கு நன்மை செய்பவன் தனக்கும் நன்மை தேடிக்கொள்கிறான்.[2]
  • மற்றொருவனுக்கு நன்மை செய்வதில் ஒருவன் தனக்கும் நன்மை செய்துகொள்கிறான். முடிவான பயனில் மட்டுமன்றி அந்தச் செயலிலேயே நன்மை இருக்கின்றது. நன்மையைக் செய்கிறோம் என்ற எண்ணம் போதிய சன்மானமாகும்.[3]
  • உலகத்தின் நல்ல பொருள்களைத் தேவையுள்ளவர்களுக்குப் பகிர்ந்து கொடுப்பதில் எனக்குக் கிடைக்கும் இன்பத்தைப் பார்க்கினும் எனக்கு அதிக மகிழ்ச்சியளிப்பது வேறில்லை.[4]
  • மனத்தில் உயர்ந்த எண்ணங்களும் இலட்சியங்களும் இருக்குமானால், ஆன்மா உடம்பில் இருக்கும் பொழுதே ஆண்டவன் சன்னிதானத்தில் இருப்பதாகும்.[5]
  • ஆட்டு மந்தை போல் நடவாமையே அனைத்திலும் முக்கியமான விஷயம். பிறர்போகும் இடத்தைவிட்டு நாம் போகவேண்டிய இடத்தை அறிவதே கடன்.[6]
  • பேச்சில் தீமை கலந்துவிட்டால், மனத்திலும் தீமை கலந்து விடும்.[7]
  • என்னிடம் உதவி பெற்றவன் அதை மறந்தால் அது அவன் குற்றம். ஆனால் நான் உதவி செய்யாவிட்டால் அது என் குற்றம்.-[8]
  •  பெறுவது போலவே கொடுக்கவும் வேண்டும் சந்தோஷமாய், விரைவாய், தயக்கமின்றிக், கையைவிட்டுக் கிளம்பாத கொடையால் பயனில்லை.[8]
  • உபகாரமானது செய்த சேவையில் அடங்காது. செய்தவனுடைய நோக்கத்திலேயே அடங்கும்.[9]
  • எந்த மனிதனும் தன் தீமைகளை முன் ஒப்புக் கொள்வதில்லை. ஏனெனில், அவன் இன்னும் அவைகளில் திளைத்துக்கொண்டிருக்கிறான். விழித்தெழுபவன்தான் தன் கனவைப்பற்றிப் பேச முடியும். [10]
  • உன் கடமையைத் தைரியமாய்ச் செய்துவிட்டால் நீ அடையும் பலன் யாது? அதைச் செய்ததையே பலனாய் அடைவாய். செயலே பலனாகும்.[11]
  • பிரிந்துள்ள நண்பர்களை இணைப்பது கடிதங்கள்.[12]
  • உழைப்பு உடலை வலிமையாக்கும். கஷ்டங்கள் மனத்தை வலிமையாக்கும்.[13]
  • ஏதாவது ஓர் அறிவுத் துறையில் விசேடத் திறயை பெறுவதற்காக நீ எந்தக் கஷ்டமான உழைப்பையும் மேற்கொள்ள வேண்டும். ஆயினும், முற்றிலும் ஒரே துறையில் மட்டுமன்றி. எல்லாத் துறைகளையும்பற்றி ஓரளவு உனக்குத் தெரிந்திருக்க வேண்டும். [14]
  • நாம் பிரஜைகளாகப் பிறந்துள்ளோம். சுதந்தரத்துடன் நாம் இறைவனை வணங்குவது கடமை. இதைச் செய்பவன் சுதந்தரமாகவும். சேமமாகவும், இன்பமாயும் இருப்பான்.[15]
  • கொடுமை அனைத்தும் கடினச் சித்தத்திலிருந்தும், பலவீனத்திலிருந்தும் தோன்றுகின்றன.[16]
  • கோபத்திற்குச் சிறந்த மருந்து தாமதித்தல்.[17]
  • சமூகம் அனைத்தின் நன்மைக்காக நாம் பிறந்துள்ளோம் என்று சருதவேண்டும்.[18]
  • நம்முடனுள்ள ஒருவன் எவ்வளவு கேவலமான தாழ்ந்தவனாயினும், அவனும் நம் மனித இனத்தைச் சேர்ந்தவனே.[18]
  • சிக்கனம்-அதுவும் ஒரு வித வருமானமே.[19]
  • உன்னை நீயே மதித்துக்கொள்ளும் அளவுக்கு நீ வந்துவிட்டால், அதற்குமேல் உனக்கு ஆசிரியர் தேவையில்லை.[20]
  • நன்மை செய்தவர்க்கு நன்மை செய்யாதிருப்பது மனித குணத்திற்கு விரோதம். நன்மை செய்தவர்க்குத் தீமை செய்வது பேய்க் குணமாகும்.[21]
  • நன்றி செய்தாயா-அதைப்பற்றிப் பேசற்க. நன்றி பெற்றாயா- அதைப்பற்றிப் பேசுக.[21]
  • நான் நன்றியோடு இருக்க வேண்டும் என்று உறுதியாக எண்ணினால், அவ்வாறே இருப்பேன்.[22]
  • அளவுக்கதிகமான சோகம், அளவுக்கதிகமான சிரிப்பைப் போல் மடமையாகும்; ஆனால், துக்கமே கொண்டாடாமல் இருப்பது உணர்வில்லாமை ஆகும்.[23]
  • தீயொழுக்கம் நல்லொழுக்கத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டு நாம் அறியாமலே நம்மிடம் குடி புகுந்துவிடும். [24]
  • நமது வாழ்க்கையை முறைப்படுத்திக்கொள்ளவும், உணர்ச்சிகளை நிதானப்படுத்திக்கொள்ளவும் நீதி வாக்கியங்களை விதித்து அருளியவன். இப்பொழுது மட்டுமன்றி, பின்வரும் தலைமுறைகளிலும் மனித இயற்கைக்குப் பெரிய நன்மையைச் செய்தவனாவான்.[25]
  • பெரிய நூல் நிலையம், படிப்பவன் சிந்தனையைப் பல விதங்களில் திருப்பிவிடக்கூடும்; பல ஆசிரியர்களின் நூல்களைப் பார்த்துக்கொண்டு சுற்றுவதைவிடச் சில ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு பார்த்தல் நலம். [26]
  • கடவுள் தூபத்தையும் காணிக்கையையும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், வணங்குபவனின் அந்தரங்க சுத்தியையும் பக்தியையுமே ஏற்றுக்கொள்கிறார்.[27]
  • பகை வன்மம் தான் தயாரிக்கும் விடத்தில் பாதியைத் தானே குடித்துவிடும்.[28]
  • வன்மமுள்ள இடத்தில் எந்தப் பெரிய நன்மையும் சிறிதாகிவிடும்.[28]
  • நூல்களை முறையாகக் கற்றல் நன்மை தரும். ஆனால் இன்பம் அளிப்பது முறையின்றிக் கற்றலே. [29]
  • பழிவாங்குதல் என்பது மனிதப் பண்புக்கு விரோத மானதோர் மொழியாகும்.[30]
  • தன் வாரிசுக்காகத் தான் பட்டினி கிடந்து ஒரு மனிதன் செல்வம் சேர்த்து வைப்பது எவ்வளவு அறிவீனம்! இது நண்பனை விரோதியாக்குவது போன்றது. நீ மரிக்கும் பொழுது உன் வாரிசு நீ விட்டுச் செல்லும் செல்வத்தின் அளவில்தான் மகிழ்ச்சி அடைவான்.[31]
  • மனித சமுதாயத்தின் ஆதித் தோற்றம் ஒரே மாதிரியானது நல்ல பரிசுத்தமான மனச்சாட்சியே மனிதனைப் பெருமையுடையவனாகச் செய்கின்றது. அந்தப் பெருமை வானிலிருந்து வருவது.[32]
  • உண்மையான மகிழ்ச்சியின் அடிப்படை மனச்சான்றில் உள்ளது.[33]
  • ஒரே மனிதனைக் கடவுள் மனிதர்களாகப் பிரித்துள்ளார். அவர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ள வேண்டும் என்பது அவர் நோக்கம்.[34]
  • மனித சமூகத்தை விட்டு மேலெழுந்து நிற்காத மனிதன் ஓர் அற்பப் பொருளாவான்.
  • உலகம் காட்டுகிற வழியில், நாம் பின்பற்றிச் செல்கிறோம்.[35]
  • கடவுளிடம் பிரார்த்திக்க வேண்டிய மூன்று வரங்கள்: முதலாவதாக நல்ல மனச்சான்று, இரண்டவாதாக மன ஆரோக்கியம், மூன்றாவதாகத் தேக ஆரோக்கியம்.[36]
  • மேலே உயர வேண்டும் என்ற ஆசையையும், செருக்கையும் எடுத்துவிடுங்கள். பிறகு உங்களுடைய வீரர்களும், பக்தர்களும் எங்கே இருக்கின்றனர் என்று பாருங்கள்![37]

குறிப்புகள்

[தொகு]
  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 43-46. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  2. என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 13- 21. 
  3. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 62-65. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  4. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 78-81. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  5. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/ஆன்மா. நூல் 44- 46. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  6. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/இலட்சியம். நூல் 46- 50. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  7. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 116. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  8. 8.0 8.1 பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/ஈகை. நூல் 141-143. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  9. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/உபகாரம். நூல் 146-148. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  10. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 140-141. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  11. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கடமை. நூல் 63- 66. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  12. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 147-148. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  13. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 148. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  14. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 153. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  15. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 160. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  16. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 167. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  17. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 168-169. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  18. 18.0 18.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 171. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  19. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சிக்கனம். நூல் 113- 114. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  20. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 208. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  21. 21.0 21.1 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நன்றியறிதல். நூல் 82- 84. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  22. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 232. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  23. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 200-201. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  24. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வஞ்சகம். நூல் 74- 75. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  25. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 242-243. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  26. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 244-245. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  27. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 247-248. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  28. 28.0 28.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 250. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  29. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/படித்தல். நூல் 168-171. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  30. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/பழிவாங்குதல். நூல் 75- 76. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  31. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 268. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  32. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 256. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  33. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 300-301. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  34. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 302. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  35. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 310. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  36. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வழிபாடு. நூல் 34- 35. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  37. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 316. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=செனீக்கா&oldid=37359" இலிருந்து மீள்விக்கப்பட்டது