செனீக்கா
Appearance
செனீக்கா (Seneca the Younger) (கி.மு. 4 – கி.பி 65) என்பவர் உரோமானிய உறுதிப்பாட்டுவாத மெய்யியலாளர். அரசியலாளர் நாடக ஆசிரியர் ஆவார்.
இவரது மேற்கோள்கள்
[தொகு]- பலாத்காரத்தின் துணைகொண்டு வகித்துவரும் அதிகாரம் நீடித்து நிற்பது அரிது. ஆனால் அமைதியும் நிதானமும் எல்லா விஷயங்களையும் நீடித்து நிற்கச் செய்பவை.[1]
- பிறர்க்கு நன்மை செய்பவன் தனக்கும் நன்மை தேடிக்கொள்கிறான்.[2]
- மற்றொருவனுக்கு நன்மை செய்வதில் ஒருவன் தனக்கும் நன்மை செய்துகொள்கிறான். முடிவான பயனில் மட்டுமன்றி அந்தச் செயலிலேயே நன்மை இருக்கின்றது. நன்மையைக் செய்கிறோம் என்ற எண்ணம் போதிய சன்மானமாகும்.[3]
- உலகத்தின் நல்ல பொருள்களைத் தேவையுள்ளவர்களுக்குப் பகிர்ந்து கொடுப்பதில் எனக்குக் கிடைக்கும் இன்பத்தைப் பார்க்கினும் எனக்கு அதிக மகிழ்ச்சியளிப்பது வேறில்லை.[4]
- மனத்தில் உயர்ந்த எண்ணங்களும் இலட்சியங்களும் இருக்குமானால், ஆன்மா உடம்பில் இருக்கும் பொழுதே ஆண்டவன் சன்னிதானத்தில் இருப்பதாகும்.[5]
- ஆட்டு மந்தை போல் நடவாமையே அனைத்திலும் முக்கியமான விஷயம். பிறர்போகும் இடத்தைவிட்டு நாம் போகவேண்டிய இடத்தை அறிவதே கடன்.[6]
- பேச்சில் தீமை கலந்துவிட்டால், மனத்திலும் தீமை கலந்து விடும்.[7]
- என்னிடம் உதவி பெற்றவன் அதை மறந்தால் அது அவன் குற்றம். ஆனால் நான் உதவி செய்யாவிட்டால் அது என் குற்றம்.-[8]
- பெறுவது போலவே கொடுக்கவும் வேண்டும் சந்தோஷமாய், விரைவாய், தயக்கமின்றிக், கையைவிட்டுக் கிளம்பாத கொடையால் பயனில்லை.[8]
- உபகாரமானது செய்த சேவையில் அடங்காது. செய்தவனுடைய நோக்கத்திலேயே அடங்கும்.[9]
- எந்த மனிதனும் தன் தீமைகளை முன் ஒப்புக் கொள்வதில்லை. ஏனெனில், அவன் இன்னும் அவைகளில் திளைத்துக்கொண்டிருக்கிறான். விழித்தெழுபவன்தான் தன் கனவைப்பற்றிப் பேச முடியும். [10]
- உன் கடமையைத் தைரியமாய்ச் செய்துவிட்டால் நீ அடையும் பலன் யாது? அதைச் செய்ததையே பலனாய் அடைவாய். செயலே பலனாகும்.[11]
- பிரிந்துள்ள நண்பர்களை இணைப்பது கடிதங்கள்.[12]
- உழைப்பு உடலை வலிமையாக்கும். கஷ்டங்கள் மனத்தை வலிமையாக்கும்.[13]
- ஏதாவது ஓர் அறிவுத் துறையில் விசேடத் திறயை பெறுவதற்காக நீ எந்தக் கஷ்டமான உழைப்பையும் மேற்கொள்ள வேண்டும். ஆயினும், முற்றிலும் ஒரே துறையில் மட்டுமன்றி. எல்லாத் துறைகளையும்பற்றி ஓரளவு உனக்குத் தெரிந்திருக்க வேண்டும். [14]
- நாம் பிரஜைகளாகப் பிறந்துள்ளோம். சுதந்தரத்துடன் நாம் இறைவனை வணங்குவது கடமை. இதைச் செய்பவன் சுதந்தரமாகவும். சேமமாகவும், இன்பமாயும் இருப்பான்.[15]
- கொடுமை அனைத்தும் கடினச் சித்தத்திலிருந்தும், பலவீனத்திலிருந்தும் தோன்றுகின்றன.[16]
- கோபத்திற்குச் சிறந்த மருந்து தாமதித்தல்.[17]
- சமூகம் அனைத்தின் நன்மைக்காக நாம் பிறந்துள்ளோம் என்று சருதவேண்டும்.[18]
- நம்முடனுள்ள ஒருவன் எவ்வளவு கேவலமான தாழ்ந்தவனாயினும், அவனும் நம் மனித இனத்தைச் சேர்ந்தவனே.[18]
- சிக்கனம்-அதுவும் ஒரு வித வருமானமே.[19]
- உன்னை நீயே மதித்துக்கொள்ளும் அளவுக்கு நீ வந்துவிட்டால், அதற்குமேல் உனக்கு ஆசிரியர் தேவையில்லை.[20]
- நன்மை செய்தவர்க்கு நன்மை செய்யாதிருப்பது மனித குணத்திற்கு விரோதம். நன்மை செய்தவர்க்குத் தீமை செய்வது பேய்க் குணமாகும்.[21]
- நன்றி செய்தாயா-அதைப்பற்றிப் பேசற்க. நன்றி பெற்றாயா- அதைப்பற்றிப் பேசுக.[21]
- நான் நன்றியோடு இருக்க வேண்டும் என்று உறுதியாக எண்ணினால், அவ்வாறே இருப்பேன்.[22]
- அளவுக்கதிகமான சோகம், அளவுக்கதிகமான சிரிப்பைப் போல் மடமையாகும்; ஆனால், துக்கமே கொண்டாடாமல் இருப்பது உணர்வில்லாமை ஆகும்.[23]
- தீயொழுக்கம் நல்லொழுக்கத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டு நாம் அறியாமலே நம்மிடம் குடி புகுந்துவிடும். [24]
- நமது வாழ்க்கையை முறைப்படுத்திக்கொள்ளவும், உணர்ச்சிகளை நிதானப்படுத்திக்கொள்ளவும் நீதி வாக்கியங்களை விதித்து அருளியவன். இப்பொழுது மட்டுமன்றி, பின்வரும் தலைமுறைகளிலும் மனித இயற்கைக்குப் பெரிய நன்மையைச் செய்தவனாவான்.[25]
- பெரிய நூல் நிலையம், படிப்பவன் சிந்தனையைப் பல விதங்களில் திருப்பிவிடக்கூடும்; பல ஆசிரியர்களின் நூல்களைப் பார்த்துக்கொண்டு சுற்றுவதைவிடச் சில ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு பார்த்தல் நலம். [26]
- கடவுள் தூபத்தையும் காணிக்கையையும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், வணங்குபவனின் அந்தரங்க சுத்தியையும் பக்தியையுமே ஏற்றுக்கொள்கிறார்.[27]
- பகை வன்மம் தான் தயாரிக்கும் விடத்தில் பாதியைத் தானே குடித்துவிடும்.[28]
- வன்மமுள்ள இடத்தில் எந்தப் பெரிய நன்மையும் சிறிதாகிவிடும்.[28]
- நூல்களை முறையாகக் கற்றல் நன்மை தரும். ஆனால் இன்பம் அளிப்பது முறையின்றிக் கற்றலே. [29]
- பழிவாங்குதல் என்பது மனிதப் பண்புக்கு விரோத மானதோர் மொழியாகும்.[30]
- தன் வாரிசுக்காகத் தான் பட்டினி கிடந்து ஒரு மனிதன் செல்வம் சேர்த்து வைப்பது எவ்வளவு அறிவீனம்! இது நண்பனை விரோதியாக்குவது போன்றது. நீ மரிக்கும் பொழுது உன் வாரிசு நீ விட்டுச் செல்லும் செல்வத்தின் அளவில்தான் மகிழ்ச்சி அடைவான்.[31]
- மனித சமுதாயத்தின் ஆதித் தோற்றம் ஒரே மாதிரியானது நல்ல பரிசுத்தமான மனச்சாட்சியே மனிதனைப் பெருமையுடையவனாகச் செய்கின்றது. அந்தப் பெருமை வானிலிருந்து வருவது.[32]
- உண்மையான மகிழ்ச்சியின் அடிப்படை மனச்சான்றில் உள்ளது.[33]
- ஒரே மனிதனைக் கடவுள் மனிதர்களாகப் பிரித்துள்ளார். அவர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ள வேண்டும் என்பது அவர் நோக்கம்.[34]
- மனித சமூகத்தை விட்டு மேலெழுந்து நிற்காத மனிதன் ஓர் அற்பப் பொருளாவான்.
- உலகம் காட்டுகிற வழியில், நாம் பின்பற்றிச் செல்கிறோம்.[35]
- கடவுளிடம் பிரார்த்திக்க வேண்டிய மூன்று வரங்கள்: முதலாவதாக நல்ல மனச்சான்று, இரண்டவாதாக மன ஆரோக்கியம், மூன்றாவதாகத் தேக ஆரோக்கியம்.[36]
- மேலே உயர வேண்டும் என்ற ஆசையையும், செருக்கையும் எடுத்துவிடுங்கள். பிறகு உங்களுடைய வீரர்களும், பக்தர்களும் எங்கே இருக்கின்றனர் என்று பாருங்கள்![37]
குறிப்புகள்
[தொகு]- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 43-46. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 13- 21.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 62-65. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 78-81. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/ஆன்மா. நூல் 44- 46. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/இலட்சியம். நூல் 46- 50. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 116. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ 8.0 8.1 பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/ஈகை. நூல் 141-143. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/உபகாரம். நூல் 146-148. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 140-141. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கடமை. நூல் 63- 66. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 147-148. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 148. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 153. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 160. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 167. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 168-169. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ 18.0 18.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 171. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சிக்கனம். நூல் 113- 114. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 208. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ 21.0 21.1 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நன்றியறிதல். நூல் 82- 84. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 232. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 200-201. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வஞ்சகம். நூல் 74- 75. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 242-243. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 244-245. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 247-248. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ 28.0 28.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 250. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/படித்தல். நூல் 168-171. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/பழிவாங்குதல். நூல் 75- 76. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 268. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 256. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 300-301. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 302. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 310. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வழிபாடு. நூல் 34- 35. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 316. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.